ஆதார் கார்டை பிறந்த தேதி சான்றாக பயன்படுத்த முடியுமா?.. UIDAI கூறுவது என்ன?

Is Aadhaar card valid as proof for date of birth | இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டை பிறந்த தேதிக்கு சான்றாக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டை பிறந்த தேதி சான்றாக பயன்படுத்த முடியுமா?.. UIDAI கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Apr 2026 16:08 PM

 IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. இந்திய குடிமக்களுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டையை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) வழங்குகிறது. ஒரு தனிநபர் குறித்த மிக முக்கிய அம்சங்களை கொண்ட இந்த ஆதார் கார்டை, பிறந்த தேதிக்கு சான்றாக பயன்படுத்த முடியுமா என்பது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டை பிறந்த தேதி சான்றாக பயன்படுத்த முடியுமா?

ஆதார் கார்டில் ஒரு தனி நபரின் பெயர், முகவரி, வயது, பாலினம், பிறந்த தேதி, கண் ரேகை மற்றும் கை ரேகை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம் பெற்று இருக்கும். இத்தகைய முக்கியமான தகவல்களை ஆதார் கொண்டு இருக்கும் நிலையில், ஆதார் கார்டை எதற்கெல்லாம் ஆதாரமாக பயன்படுத்தலாம், எதற்கெல்லாம் பயன்படுத்த முடியாது என்ற குழப்பம் நிலவி வருகிறது. அந்த குழப்பங்களின் ஒன்றுதான், ஆதார் கார்டை பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியுமா என்பது.

இதையும் படிங்க : அமேசானில் ரூ.1,000-க்கு குறைவாக கிடைக்கும் இயர்பட்ஸ்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுவது என்ன?

2024 ஆம் ஆண்டு இது குறித்து விளக்கம் அளித்த இந்திய தேர்தல் ஆணையம் கூறியதாவது, ஆதார் என்பது ஒரு அடையாள அட்டை மட்டுமே. அது பிறந்த தேதிக்கு சான்றாக அமையாது என கூறியது. காரணம், ஆதார் சட்டம் 2016-ன் கீழ் ஆதார் எண் என்பது ஒரு அடையாளத்திற்கான ஒரு சான்று மட்டுமே. ஆதார் அட்டை மட்டும் வைத்துக்கொண்டு குடியுரிமை அல்லது குடியிருப்புக்கான எந்த ஒரு உரிமையும் கோர முடியாது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவில் அமலுக்கு வரும் மாற்றம்?.. வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் ஒரு மனிதரின் பிறப்பு மற்றும் இறப்பு என இரண்டு முக்கிய நிகழ்வுகள் குடியுரிமை பதிவுகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 1968 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?