தங்கம் விலை தடாலடியாக சரிவு.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய விலை நிலவரம்!!
Gold Price Today: தங்கம் விலை தற்போது 'ரேஞ்ச் பவுண்ட்' நிலையில் இருப்பதால், விலை குறையும் நேரங்களில் சிறுகச் சிறுக வாங்குவது (SIP முறை) சிறந்த முதலீடாக இருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக வரும் நாட்களில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் தங்கம் விலையின் திசையைத் தீர்மானிக்கும்
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ஆயிரத்திற்கும் மேல் குறைந்து விற்பனையாவதால், நகை வாங்குபவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கம் விலை, இன்று தடீரென குறைந்திருப்பது சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மே மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!
தங்கம், வெள்ளி விலை:
அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,12,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று கணிசமான சரிவு காணப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 5,000 வரை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று சில்லறை விற்பனையில் வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், கிலோ 2,65,000க்கும் விற்கப்படுகிறது.
விலை ஏற்ற இறக்கத்திற்கு முக்கிய காரணங்கள்:
மத்திய கிழக்கு நாடுகளில் (குறிப்பாக ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம்) நிலவும் சூழல் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளது. இதனால் பதற்றம் அதிகரிக்கும் போது விலை உயருகிறது. டாலரின் மதிப்பு மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின் வட்டி விகிதங்கள் தங்கம் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க: கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது பெரிய சிக்கல்.. வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!
தங்கம் வாங்குபவர்கள் கவனத்திற்கு:
தங்கம் விலை தற்போது ‘ரேஞ்ச் பவுண்ட்’ நிலையில் இருப்பதால், விலை குறையும் நேரங்களில் சிறுகச் சிறுக வாங்குவது (SIP முறை) சிறந்த முதலீடாக இருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக வரும் நாட்களில் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் தங்கம் விலையின் திசையைத் தீர்மானிக்கும். சென்னையில் தங்கம் விலை இன்று சிறு உயர்வைச் சந்தித்தாலும், கடந்த வார உச்சத்துடன் ஒப்பிடுகையில் இது வாங்குவதற்கு உகந்த விலையாகவே பார்க்கப்படுகிறது.