மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?.. அப்போது இந்த திட்டத்துல இப்படி முதலீடு செய்யுங்க!
Post Office Monthly Income Scheme | அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் அசத்தலான திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.1.1 லட்சம் வரை லாபம் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
விலைவாசி உயர்வு, தேவை அதிகரிகரிப்பு, பண வீக்கம் உள்ளிட்டவை காரணமாக பொதுமக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நிதி தேவை ஏற்படலாம். எனவே பொதுமக்கள் தாங்கள் மாதம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிய அளவேனும் சேமித்து வைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு மாத ஊதியம் பெறும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவது தான் இந்த தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் (POMS – Post Office Monthly Income Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் மாதம் ரூ.1.1 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தபால் நிலைய மாத வருமான திட்டம்
பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் தபால் நிலைய மாத வருமான திட்டம். ஒருமுறை முதலீடு செய்து மாதம் வருமானம் ஈட்ட உதவும் திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளரின் வங்கி கணக்கிற்கு சென்று சேர்ந்துவிடும். அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் உள்ளதால் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க : RD : தினமும் ரூ.340 முதலீடு செய்து ரூ.17 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த தபால் நிலைய மாத வருமான திட்டத்தில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஒருவேளை திட்டத்தின் கால அளவு முடிந்துவிட்டது என்றால் அந்த பணத்தை எடுத்து புதிய திட்டத்தை திறந்து அதில் முதலீடு செய்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தை பொருத்தவரை இரண்டு கணக்குகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது தனிநபர் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு. இந்த தனிநபர் கணக்கில் ஒருவர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக் கணக்கு என்றால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இதையும் படிங்க : Emergency Fund : அவசர தேவைக்கு உதவும் எமெர்ஜென்சி ஃபண்ட்.. ஏன் அவசியம்?
இந்த கூட்டுக் கணக்கு திட்டத்தில் ஒருவர் ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் மாதம் ரூ.9,250 மற்றும் ஒரு ஆண்டுக்கு ரூ.1,11,000 கிடைக்கும். இதேபோல தனிநபர் கணக்கில் ஒருவர் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு மாதத்திற்கு ரூ.5,550 வருமானமும், ஒரு ஆண்டுக்கு ரூ.66,600 வட்டியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.