கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!

Share Market Crashed Today | ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று மீண்டும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Mar 2026 11:54 AM

 IST

மும்பை, மார்ச் 30 : ஈரான் போர் (Iran War) காரணமாக இந்திய பங்குச்சந்தை (Indian Share Market) கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று மீண்டும் இந்திய பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அதாவது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் (Sensex) 1,066.36 புள்ளிகள் சரிந்து 72,516.86 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல, நிஃப்டி (Nifty) 316.30 புள்ளிகள் சரிவை சந்தித்து 22,503.30 ஆக வர்த்தகமானது.

ஈரான் போர் காரணமாக கடும் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் புவிசார் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஈரான் மீதான போர் தொடங்கிய பிபரவரி 28, 2026 அன்று முதலே இந்திய பங்குச்சந்தை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள கச்சா என்ணெய் தட்டுப்பாடு, முதலீட்டாளர்களின் கவனம் கச்சா எண்ணெய் மீது திரும்பியுள்ளது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : ETF Vs மியூச்சுவல் ஃபண்ட்.. இரண்டில் இரண்டு மடங்கு லாபம் தருவது எது?

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை இன்றும் கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,066.36 புள்ளிகள் சரிவை சந்தித்து 72,516.86 புள்ளிகளுடன் வர்த்தகமானது. இதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 316.30 புள்ளிகள் சரிவை சந்தித்து 22,503.30 புள்ளிகளுடன் வர்த்தகமானது.

இதையும் படிங்க : மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை.. 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..