வறுமையினால் 13 வயதில் படிப்பை கைவிட்ட சிறுவன்…. இன்று ரூ.1000 கோடி நிறுவனத்தின் தலைவர் – ஜிஆர்பி பிராண்ட் ஜெயித்த கதை
GRB Success Story: இந்தியாவில் வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து தொழில் சாதித்தவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஒருவர் தான் ஜிஆர் பாலசுப்ரமணியம். ஜிஆர்பி நிறுவனத்தின் தலைவர். வறுமை காரணமாக 13 வயதில் வேலைக்கு சென்ற அவர் இன்று ரூ.1000 கோடி நிறுவனத்தின் தலைவர்.

ஜி.ஆர்.பாலசுப்ரமணியம்
இந்தியாவில் வறுமை காரணமாக பாதியில் படிப்பை கைவிடுபவர்கள் வாழ்க்கையில் சாதித்த பல கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒருவர் தான் ஜி.ஆர்.பாலசுப்ரமணியம். குடும்ப வறுமை காரணமாக தனது 13 வயதில் படிப்பை பாதியில் வேலைக்கு செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் (Bengaluru) தனது அக்கா தயாரித்த வெண்ணெய்யை வீடு வீடாக சென்று விற்பனை செய்தார். இப்படித்தான் அவரது வியாபாரம் தொடங்கியது.அதில் அவருக்கு பல ஆண்டுகள் அனுபவத்துடன் மக்களின் நன்மதிப்பையும் பெற்றார். அதில் இருந்து அவருக்கு கிடைத்தது தான் ஜிஆர்பி என்ற பெயரில் தொழில் துவங்க காரணமாக அமைந்திருக்கிறது. பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பெங்களூரு மக்களின்நிலையை புரிந்து கொண்ட அவர் பிறகு அவரே வெண்ணெய்யை நெய்யாக (Ghee) மாற்றி விற்பனை செய்யத் தொடங்கினார். அது தான் அனைத்துக்குமான ஆரம்பப்புள்ளி.
வியாபார தந்திரம்
தன் அக்காவிடம் இருந்து வெண்ணெய்யை பெற்று பெங்களூரு நகரில் வீடு வீடாக விற்பனை செய்த ஜி.ஆர்.பாலசுப்ரமணியத்துக்கு வியாபார நுணுக்கம் தெரிய வருகிறது. அவர்களின் அவசர வாழ்க்கையை புரிந்து கொண்டவர், வெண்ணெய்யை நெய்யாக மாற்றி விற்பனை செய்யத் தொடங்குகிறார். வெண்ணெய் சீக்கிரம் கெட்டு விடும் என்பதால் வணிகர்களுக்கு அதனை சேமித்து வைப்பது சிரமமாக இருந்தது. இந்த நிலையில் அதனைப் புரிந்துகொண்ட பாலசுப்ரமணியம், நெய்யாக மாற்றி விற்பனை செய்தார். இது விரைவிலேயே மக்களின் நன்மதிப்பை பெற்று வியாபாரமும் அதிகரித்தது. குறிப்பாக அவரது நெய்யின் தரம் மக்களின் மனதை கவர்ந்தது. இப்படித்தான் உருவானது ஜிஆர்பி என்ற பிராண்ட்.
இதையும் படிக்க : மெரினாவில் டீ , சமோசா விற்றவர்… இன்று 14 ஹோட்டல்களின் உரிமையாளர் – யார் இந்த பாட்ரிசியா நாராயண்?
மக்களிடம் கிடைத்த பேராதரவை அடுத்து, கடந்த 1991 ஆம் ஆண்டு, ஜிஆர்பி நெய் என்ற பெயரில் விற்பனையைத் தொடங்கினார். பெங்களூருவில் ஜெயநகர், பசவங்குடி, ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், விஜயநகர் ஆகிய பகுதிகளை ஜிஆர்பி நெய்யை மக்களுக்கு அறிமுகம் செய்தார்.
முன்னணி நிறுவனங்களின் போட்டியை எதிர்கொண்ட ஜிஆர்பி நெய்
இந்தியாவின் பால் சார்ந்த நிறுவங்கள் கடும் போட்டி நிலவுகிறது. அமுல், ஐடிசி, ஆசிர்வாத், ஆரோக்கியா என முன்னிணி பிராண்டுகள் ஏற்கனவே சந்தையில் கோலோச்சியிருந்தது. இதற்கிடையில் ஜிஆர்பி நெய் தனது முத்திரையை அழுத்தமாக வளர்ந்தது. ஜிஆர்பி டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் அமைதியாகவும் உறுதியுடனும் வளர்ந்தது. இன்று சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் விற்பனையை விரிவு செய்திருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் ரூ.1010 கோடி மதிப்புடைய பிராண்டாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிக்க : மாதத் தவணை திட்டம் – நிறைவேறிய எளிய குடும்பங்களின் கனவுகள் – வசந்தகுமாரின் வெற்றிக்கதை
விபத்தினால் ஏற்பட்ட முன்னேற்றம்
கடந்த 1984 ஆம் ஆண்டு ஜி.ஆர்.பாலசுப்ரமணியம் பெங்களூருவில் உள்ள கடைக்காரரிடம் தனது நெய்யை அறிமுகப்படுத்த முயன்றார். ஆனால், அப்போது கடைக்காரர், ஏற்கனவே தங்களிடம் பல பிராண்டுகள் இருக்கிறது. இதற்கிடையில் உங்கள் நெய்யை ஏன் விற்க வேண்டும் என கேட்டார். அப்போது எதிர்பாராத விதமாக, நெய் பாட்டில் ஒன்று கீழே விழுந்து உடைந்தது. இதனை பார்த்த கடைக்காரர், மனம் மாறி வாங்கி ஒரு பெட்டி நெய்யை வாங்கியிருக்கிறார். இது தான் அனைத்துக்கும் துவக்கமாக அமைந்திருக்கிறது. அதாவது சரியாக இரண்டே மாதங்களில் 1000 கிலோ நெய் விற்கும் அளவுக்கு அவரது நிறுவனம் வளர்ந்திருக்கிறது.