2026-ல் தங்கம், வெள்ளி, காப்பர் உச்சத்தை தொடும்.. பாபா வங்கா கணிப்பு!
Gold, Silver and Copper Will Hit New Record | தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் தங்கம் விலை தற்போது உச்சத்தில் தான் உள்ளது. இந்த நிலையில், 2026-ல் தங்கம், வெள்ளி மற்றும் காப்பர் உச்சத்தை தொட உள்ளதாக பாபா வங்காவின் கணிப்பு வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
உலக அளவில் தங்கம் (Gold) விலை நாளுக்கு நாள் மிக கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. இன்றைய (பிப்ரவரி 04, 2026) நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே தங்கம் கடுமையான உச்சத்தில் உள்ள நிலையில், தங்கம் குறித்த பாபா வங்காவின் கணிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் குறித்து பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கல்லாம்.
தங்கம் குறித்து வெளியாகியுள்ள பாபா வங்காவின் கணிப்பு
பாபா வங்கா பல்கேரியாவை சேர்ந்தவர். இவர் தீர்க்கதரிசி என அழைக்கப்படுகிறார். பாபா வங்கா இறந்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் நடக்க கூடியதை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளதாகவும், அவரது கணிப்புகளின் படி பல்வெறு விஷயங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அவ்வப்போது பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அவர் தங்கம் குறித்து குறிப்பிட்டுள்ள கணிப்பு தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : காங்கோவில் சுரங்க விபத்து.. 200 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!
தங்கம் விலை 25% முதல் 40% வரை உயரும்
2026 ஆம் ஆண்டு உலக அளவில் மிகப்பெரிய பண வீக்கம் ஏற்படும் என்று பாபா வங்கா கூறியுள்ளார். இந்த பணவீக்கத்தின் போது தங்கம், வெள்ளி மற்றும் காப்பர் ஆகியவை பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் என்றும் இதன் காரணமாக தங்கம் மிக கடுமையான விலை உயர்வை அடையும் என்றும் கூறியுள்ளார். அதாவது 2026-ல் தங்கம் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக பாபா வங்கா கணித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 10 மாத குழந்தையின் உடலில் 600 முறை ஊசியால் குத்திய கொடூர தாய்.. சீனாவில் பகீர் சம்பவம்!
பாபா வங்காவின் இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில் 10 கிராம் தங்கம் இந்தியாவில் ரூ.2.11 லட்சம் முதல் 2.43 லட்சம் வரை விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எம்சிஎக்ஸ் தற்போது 10 கிராம் தங்கத்தை ரூ.1.69 லட்சத்துக்கு வர்த்தகம் செய்கிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு மத்திய வங்கிகள் இந்த ஆண்டு 100 டன் அதிகமான தங்கத்தை வாங்கி வருகின்றன. இவை அனைத்தும் பாபா வங்காவின் கணிப்புகளை உண்மையாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.