Gold Price Today : பெரிய அடிக்கு பிறகு கிடைத்த சிறிய நிம்மதி.. மீண்டும் ரூ.10,000-க்கு கீழ் வந்த ஒரு கிராம் தங்கம்!
Gold Price Dropped in Chennai | தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ரூ.80,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 08, 2025) விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று (செப்டம்பர் 08, 2025) தங்கம் விலை கிராம் ரூ.10,000-க்கு கீழும், சவரன் ரூ.80,000-க்கு கீழும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, செப்டம்பர் 08 : தங்கம் விலை (Gold Price) செப்டம்பர் 06, 2025 அன்று அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ.80,000-த்தை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இத்தகைய உயர்வை சந்தித்த நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 08, 2025) தங்கம் விலை குறைந்து மீண்டும் ஒரு கிராம் ரூ.10,000-க்கு கீழும், ஒரு சவரன் ரூ.80,000-க்கு கீழும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ. 9,970-க்கும், ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரலாறு காணாத உச்சத்தை அடைந்த தங்கம் விலை
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையாக விலை உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். அதன்படியே, செப்டம்பர் 06, 2025 அன்று தங்கம் விலை கிராம் ரூ.10,000-த்தை கடந்தது. அன்றைய தினம் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,050-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?
மீண்டும் ரூ.10,000-க்கு கீழ் வந்த ஒரு கிராம் தங்கம்
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ.80,000-த்தை தாண்டியும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இனிமேல் தங்கமே வாங்க முடியாதா என்ற ஏக்கம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தான், தங்கம் விலை குறைந்துள்ளது சற்று நிம்மதி அளிக்கும் விதாமாக அமைந்துள்ளது. அதாவது இன்றைய (செப்டம்பர் 08, 2025) நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Post Office: தினமும் ரூ.411செலுத்தினால்… ரூ.43 லட்சம் சம்பாதிக்கலாம்… தபால் நிலைய சூப்பர் திட்டம்
தங்கம் விலை குறைந்தாலும் முழுமையாக மகிழ்ச்சி அடைய முடியாத நிலை தான் உள்ளது. காரணம், இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் மேலும் உயரும் என்றும், ஒரு கிராம் தங்கம் ரூ.20,000 வரை விற்பனை செய்யப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.