போர் நிறுத்தம் எதிரொலி.. ஒரே நாளில் 2 முறை குறைந்து 1 முறை உயர்ந்த தங்கம்!
Gold Price Changed Three Times In One Single Day | சென்னையில் இன்று காலை மற்றும் மதியம் என இரண்டு முறை தங்கம் விலை குறைந்த நிலையில், தற்போது மாலையில் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மார்ச் 23 : ஈரான் போர் (Iran War) காரணமாக புவிசார் பதற்றங்கள் அதிகமாக இருந்த நிலையில், தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வந்தது. ஆனால், தற்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை 5 நாட்களுக்கு நிறுத்த உள்ளதாக அமெரிக்கா (America) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 24, 2026) காலை ரூ.7,600 குறைந்த தங்கம் மாலை ரூ.5,360 உயர்வை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் இரண்டு முறை சரிவை சந்தித்து மூன்றாவது முறையாக உயர்வை கண்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலையில் நடைபெற்ற மாற்றங்கள் குறித்து விரிவாக பர்க்கலாம்.
ஒரே நாளில் மூன்று முறை மாற்றமடைந்த தங்கம் விலை
ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து வந்த நிலையில் தங்கம், தொடர் சரிவை சந்தித்து வந்தது. அந்த வகையில், இன்று தங்கம் இரண்டு முறை சரிவை சந்தித்தது. அதாவது 22 காரட் தங்கம் காலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு கிராம் ரூ.12,950-க்கும், சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,03,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.235-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : இனி இவற்றுக்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்.. புதிய வருமான வரி விதிகள் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவும்?
இந்த நிலையில், மதியமும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.280 குறைந்து ஒரு கிராம் ரூ.12,670-க்கும், சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மதியம் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை மாற்றம் அத்துடன் முடிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், மாலையும் ஒருமுறை மாற்றமடைந்துள்ளது.
இதையும் படிங்க : மாதம் ரூ.20,000 வருமானம்.. கடைசி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழலாம்.. அசத்தல் திட்டம்!
மாலையில் உயர்ந்த தங்கம் விலை
இன்று ஒரே நாளில் காலை, மதியம் என தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், மாலையில் ஒருமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை, மதியம் தங்கம் விலை குறைந்த நிலையில், மாலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.670 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,340-க்கும், சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.