Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலாறு காணாத உச்சம்.. ஒரு கிராம் தங்கம் ரூ. 15,000 கடந்து விற்பனை..

Gold Price: தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நிலவரப்படி தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரம் ரூபாயை கடந்துவிட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரலாறு காணாத உச்சம்.. ஒரு கிராம் தங்கம் ரூ. 15,000 கடந்து விற்பனை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 Jan 2026 11:11 AM IST

தங்கம் விலை, ஜனவரி 26, 2026: தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நிலவரப்படி தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரம் ரூபாயை கடந்துவிட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஜனவரி 26, 2026 தேதியான இன்று, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 275 ரூபாய் உயர்ந்து 15 ஆயிரத்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 2,200 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை:

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரத்து 391 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ஒரு லட்சத்து 31,128 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு பக்கம் உயர்ந்து வந்தாலும், வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய வெள்ளி விலை நிலவரத்தைப் பொறுத்தவரையில் ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து,  375 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை உயர என்ன காரணம்?

சர்வதேச அளவில் நிலவிவரும் பதற்றங்கள் மற்றும் உலக வங்கிகளில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதும், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவதும் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

ஜனவரி 23ஆம் தேதியைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் தங்கம் 14,550 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 16,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 24ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க: பட்ஜெட் 2026: பழைய மற்றும் புதிய வரி விதி முறை.. சம்பளம் பெறுவோர் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

அதனைத் தொடர்ந்து நேற்று எந்த மாற்றமும் இல்லாத சூழலில், இன்றைய தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 275 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரு சவரனுக்கு 2,200 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை மட்டுமின்றி, வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 23ஆம் தேதி எடுத்துக் கொண்டால், வெள்ளி விலை ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 24ஆம் தேதி 20 ரூபாய் அதிகரித்து 365 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் மேலும் 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.