10 மாதங்களில் 50 சதவீதம் உயர்வை சந்தித்த தங்கம்.. வருங்கால நிலவரம் என்னவாக இருக்கும்?

Gold Price Hiked 50 Percentage in 10 Months | 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சுமார் 50 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது.

10 மாதங்களில் 50 சதவீதம் உயர்வை சந்தித்த தங்கம்.. வருங்கால நிலவரம் என்னவாக இருக்கும்?

மாதிரி புகைப்படம்

Published: 

03 Nov 2025 13:00 PM

 IST

2025 ஆம் ஆண்டு தொடங்கியது தங்கம் விலை (Gold Price) கடுமையான விலை உயர்வை அடைந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு தங்கம் விலை 30 சதவீதம் விலை உயர்வை சந்தித்த நிலையில், 2025-ல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே தங்கம் விலை 50 சதவீத விலை உயர்வை அடைந்துள்ளது. ஆனால், 2024 ஆம் ஆண்டு இருந்ததை போல தங்கம் தொடர் உயர்வை சந்திக்காமல் தங்கம் தற்போது சற்று சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இதுதான் தங்கத்தை விற்பனை செய்வதற்காக சரியான நேரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் விலை நிலவரம் என்னவாக உள்ள, தற்போது விற்பனை செய்யலாமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே நாளில் சர்வதேச அளவில் சரிந்த தங்கம் விலை

2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை அடைந்து வரும் நிலையில், அது விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு தங்கம் ரூ.97,000 வரை ஒரு சவரன் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் தங்கம் கடுமையான சரிவை சந்தித்தது. அதாவது அக்டோபர் 22, 2025 அன்று சர்வதேச சந்தையில் தங்கம் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து தங்கம் விலை மேலும் குறைய தொடங்கிய நிலையில், தற்போது ரூ.90,000 என்ற அடிப்படையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Gold Price : சற்று விலை குறைந்த தங்கம்.. தற்போது முதலீடு செய்யலாமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

பல ஆண்டுகளாக ஏறு முகத்தில் இருக்கும் தங்கம் விலை

சர்வதேச கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (COMEX) தரவுகளின்படி 2000 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வு தொடர் உயர்வை சந்தித்து வரும் நிலையில், அதில் முதலீடு செய்வது எந்த வித சிக்கலையும் ஏற்படுத்தாமல் உள்ளது. இந்த நிலையில், தற்போதுள்ள விலையில் இருந்து COMEX சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டாலர்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி தங்கத்தின் விலை 10 சதவீதம் குறையும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Gold Price : கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை.. மேலும் குறையுமா?

அதாவது தற்போதுள்ள விலை நிலவரத்தில் இருந்து 10 சதவீதம் சரிவு ஏற்படும் என கூறப்படுகிறது. தற்போது ஒரு சவரன் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு சவரன் தங்கம் ரூ.80,000 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.