ஒரே நாளில் ரூ.2,400 குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.93,000-க்கு விற்பனை!
Gold Price Decreased in Chennai | தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில், இன்று (அக்டோபர் 22, 2025) அதிரடியாக விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டும் என்ற சூழல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.93,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
சென்னை, அக்டோபர் 22 : தங்கம் விலை (Gold Price) வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்த நிலையில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யும் நிலை இருந்தது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 22, 2025) 22 காரட் தங்கம் அதிரடியாக விலை குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ரூ.95,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.95,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம்
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் சரசரவென விலை உயர தொடங்கியது. 2024 ஆம் ஆண்டு தங்கம் 30 சதவீதம் விலை உயர்வை சந்தித்த நிலையில், 2025-ல் அது 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து இத்தகைய உயர்வை சந்தித்து வரும் பட்சத்தில் விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். அதன்படி, தங்கம் கடந்த வாரத்தில் ரூ.97,600 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.93,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Gold Price : தங்கம் விலை ஒரே நாளில் அபார உயர்வு.. ரூ.97,000-த்தை தாண்டி விற்பனை!
ஒரே வாரத்தில் ரூ.4,000 வரை குறைந்த தங்கம் விலை
- அக்டோபர் 16, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,900-க்கும், ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அக்டோபர் 17, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அக்டோபர் 18, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், ஒரு சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அக்டோபர் 19, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், ஒரு சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அக்டோபர் 20, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும், ஒரு சவரன் ரூ.95,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அக்டோபர் 21, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், ஒரு சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அக்டோபர் 22, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும், ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Gold Price : இந்த நாடுகளில் தங்கம் விலை மிக குறைவு.. எந்த எந்த நாடுகள்?
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இன்று (அக்டோபர் 22, 2025) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.