மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. ஷாக்கில் நகை பிரியர்கள்!
Gold Price Crossed 1,08,000 In Chennai | தங்கம் கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை அடைந்து வரும் நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று தங்கம் புதிய உச்சமாக ரூ.1,08,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜனவரி 20 : தங்கம் விலை (Gold Price) தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 20, 2026) புதிய உச்சமாக ரூ.1,08,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஜனவரி 19, 2026) புதிய உச்சமாக ரூ.1,07,000-த்தை தாண்டிய நிலையில், இன்று மேலும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாமானியர்களின் எட்டா கனியாக மாறி வரும் தங்கம்
உலக நாடுகள் இடையே அமைதி நிலவுவது, பங்குச்சந்தை நிலவரம், உலக வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை அறிவிப்பது ஆகியவை தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த நிலையில் வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா மோதலில் உள்ள நிலையில், புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?
ரூ.1,10,000 நோக்கி பயணம் செய்யும் தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 11 ஜனவரி, 2026 | ரூ.12,900 | ரூ.1,03,200 |
| 12 ஜனவரி, 2026 | ரூ.12,120 | ரூ.1,04,960 |
| 13 ஜனவரி, 2026 | ரூ.13,170 | ரூ.1,05,360 |
| 14 ஜனவரி, 2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 |
| 15 ஜனவரி, 2026 | ரூ.13,290 | ரூ.1,06,320 |
| 16 ஜனவரி, 2026 | ரூ.13,230 | ரூ.1,05,840 |
| 17 ஜனவரி, 2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 |
| 18 ஜனவரி, 2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 |
| 19 ஜனவரி, 2026 | ரூ.13,450 | ரூ.1,07,600 |
| 20 ஜனவரி, 2026 | ரூ.13,610 | ரூ.1,08,880 |
மேற்குறிப்பிட்டுள்ள விலை நிலவரத்தின் படி கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் ரூ.5,000 விலை உயர்வை அடைந்துள்ளது.
இதையும் படிங்க : 2026-ல் எப்படி முதலீடு செய்வது.. இந்த சில விஷயங்களை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.