வரலாற்றில் முதல் முறையாக ரூ.1,07,000-த்தை தாண்டிய தங்கம்.. பொதுமக்கள் ஷாக்!
Gold Price Crossed 1,07,000 Rupees In Chennai | தங்கம் கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது இன்று தங்கம் ரூ.1,07,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 19 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று வரலாற்றில் முதல் முறையாக ரூ.1,07,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.13,450-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்கம்
2025 ஆம் ஆண்டை போலவே 2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சாதகமான ஆண்டாக தொடங்கியுள்ளது. அதாவது, 2026 தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு இறுதியில் ரூ.1 லட்சத்திற்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (ஜனவரி 19, 2026 ) வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் ரூ.1,07,000-த்தை தாண்டி விற்பனையாகிறது.
இதையும் படிங்க : சாமானியர்களுக்கு எட்டா கனியாக மாறும் சொந்த வீடு.. 2026 பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களின் எதிர்ப்பார்ப்பு இதுதான்!
10 நாட்களில் ரூ.4,000 உயர்ந்த தங்கம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 10 ஜனவரி 2026 | ரூ.12,900 | ரூ.1,03,200 |
| 11 ஜனவரி 2026 | ரூ.12,900 | ரூ.1,03,200 |
| 12 ஜனவரி 2026 | ரூ.13,120 | ரூ.1,04,960 |
| 13 ஜனவரி 2026 | ரூ.13,170 | ரூ.1,05,360 |
| 14 ஜனவரி 2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 |
| 15 ஜனவரி 2026 | ரூ.13,290 | ரூ.1,06,320 |
| 16 ஜனவரி 2026 | ரூ.13,320 | ரூ.1,05,840 |
| 17 ஜனவரி 2026 | 13,280 | ரூ.1,06,240 |
| 18 ஜனவரி 2026 | ரூ.13,280 | ரூ.1,06,240 |
| 19 ஜனவரி 2026 | ரூ.13,450 | ரூ.1,07,600 |
இதையும் படிங்க : EPFO : இனி யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. வெளியான சூப்பர் தகவல்!
ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்த தங்கம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.318-க்கும், ஒரு கிலோ ரூ.3,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழ தொடங்கியுள்ளது.