நகை கடைகளில் சீட்டு கட்டி தங்கம் வாங்குவதில் இவ்வளவு பலன்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Buying Gold With Chit Scheme | தங்கம் வாங்க வேண்டிய தேவையும், ஆசையும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதேபோல தங்கம் விலையும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நகை சீட்டு கட்டி தங்கம் வாங்குவதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

நகை கடைகளில் சீட்டு கட்டி தங்கம் வாங்குவதில் இவ்வளவு பலன்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

07 Nov 2025 11:05 AM

 IST

தங்கம் விலை (Gold Price) கடுமையான உயர்வை சந்தித்து உட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு சவரன் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய கடுமையான விலை உயர்வின் காரணமாக சாமானியர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக தங்கம் மாறியுள்ளது. அனால், இந்திய பாரம்பரியத்திலும், சேமிப்பிலும் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இன்னும் உயிரிப்புடன் இருக்கிறது. ஆனால், தற்போதைய விலையில் அது அசாத்தியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், நகை கடைகளில் சீட்டு கட்டி தங்கம் வாங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது. உண்மையாகவே நகை கடையில் சீட்டு கட்டி தங்கம் வாங்குவது சிறப்பானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீட்டு கட்டி நகை எடுத்தல் என்றால் என்ன?

தற்போதைய நிலவரத்தின் படி ஒரு சவரன் தங்கம் ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களால் மொத்தமாக பணம் செலுத்தி நகை வாங்க முடியாது. இந்த நிலையில் தான் நகை கடைகளின் நகை சீட்டு முறை உங்களுக்கு கை கொடுக்கும். அதாவது நகை சீட்டு முறை 11 மாத கால அவகாசம் கொண்டு இருக்கும். இந்த திட்டத்தில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்த வேண்டும். மாதம்  எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளலாம். அவ்வாறு 11 மாதங்கள் பணம் செலுத்தும் பட்சத்தில் நீங்கள் செலுத்திய பணத்துக்கான நகையை 12வது மாதம் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : 10 மாதங்களில் 50 சதவீதம் உயர்வை சந்தித்த தங்கம்.. வருங்கால நிலவரம் என்னவாக இருக்கும்?

நகை சீட்டு கட்டுவதால் கிடைக்கும் பலன்கள்

  • நகை சீட்டு கட்டுவதன் மூலம் மொத்தமாக பணத்தை போட்டு நகை எடுக்க வேண்டிய தேவை ஏற்படாது.
  • நகை சீட்டு  மூலம் தங்கம் வாங்கும் பட்சத்தில் செய்கூலியில் தள்ளுபடி வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மாதமும் எந்த தினத்தில் தங்கம் விலை குறைவாக உள்ளதோ அன்று பணம் செலுத்தலாம்.
  • மாத தவணை முறை என்பதால் நிதி சவால்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

இதையும் படிங்க : Aadhaar : இனி ஆதாரில் மிக சுலபமாக பெயர், பிறந்த தேதியை மாற்றலாம்.. விரைவில் வரும் இ ஆதார் செயலி!

நகை சீட்டு கட்டுவதன் மூலம் மேற்குறிப்பிட்டுள்ள சிறப்பு அம்சங்களை நீங்கள் பெறலாம். ஒருவேளை நகை எடுக்கும்போது உங்களுக்கு ஏதேனும் திடீர் செலவு ஏற்பட்டு பண தேவை ஏற்பட்டால் நீங்கள் மாதம் செலுத்திய தொகையை அப்படியே பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.