வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை தடாலடியாக குறைந்தது..

Gold and silver price drop: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.310க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3.10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை தடாலடியாக குறைந்தது..

மாதிரிப் புகைப்படம்

Updated On: 

02 Mar 2026 10:43 AM

 IST

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடாலடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.310க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3.10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: போர் பதற்றம்.. இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள்..

போர் தாக்கம் ஞாயிற்றுக்கிழமை விலை உயர்வு:

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலின் அதிகரித்து வரும் தாக்குதல்கள் காரணமாக ஞாயிற்றுகிழமையான நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,775க்கும், சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.325-க்கும், ஒரு கிலோ ரூ.3,25,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 5 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை:

மார்ச் 1, 2026: 1 சவரன்- ரூ. 1,26,200| 1 கிராம்- ரூ. 15,775

பிப்ரவரி 28, 2026: 1 சவரன்- ரூ. 1,24,600| 1 கிராம்- ரூ. 15,550

பிப்ரவரி 27, 2026: 1 சவரன்- ரூ. 1,19,200| 1 கிராம்- ரூ. 14,900

பிப்ரவரி 26, 2026: 1 சவரன்- ரூ. 1,19,360| 1 கிராம்- ரூ. 14,920

பிப்ரவரி 25, 2026: 1 சவரன்- ரூ. 1,19,440| 1 கிராம்- ரூ. 14,930

இதையும் படிக்க: மேற்கு ஆசியா போர்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா? நிலவரம் என்ன?

விலை தடாலடியாக குறைந்தது:

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கூட இதுவரை தொடர்ந்து உயர்ந்ததே வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சூழல்களால் இன்றைய தினம் தங்கம் விலை உயரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவில் நேற்றைய தினமே தங்கம் விலை ரொம்ப உயர்ந்துவிட்டது. சர்வதேச சந்தையில் அந்தளவுக்கு தங்கம் விலை உயராத நிலையில், இன்று இந்தியாவில் தங்கம் விலை சரிந்தது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ