Gold Price : இரண்டாவது நாளாக தங்கம், வெள்ளி விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price Reduced For The Second Day | சென்னையில் இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : இரண்டாவது நாளாக தங்கம், வெள்ளி விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Mar 2026 10:27 AM

 IST

சென்னை, மார்ச் 03 : இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான உயர்வை சந்திக்கும் என கணிப்புகள் வெளியான நிலையில், இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. இன்று தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்ட தங்கம், வெள்ளி விலை

பிப்ரவரி 28, 2026 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த போர் வெடித்துள்ளது. அடுத்த 4 வாரங்களுக்கு ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி சரிவை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சம் வரை செல்லும்.. பகீர் கிளப்பும் பொருளாதார வல்லுநர்கள்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

இன்று (மார்ச் 03, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.15,650-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் எந்த வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ