Gold Price : ரூ.95,000-த்தை நெருங்கிய தங்கம்.. ஒரே நாளில் அதிரடி விலை உயர்வு!
Gold and Silver Price Marks History | தங்கம் கடந்த சில நாட்களாகவே கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (அக்டோடபர் 14, 2025) அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளியும் கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது.

சென்னை, அக்டோபர் 14 : தங்கம் கடந்த சில நாட்களாகவே கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 14, 2025) ஒரே நாளில் மட்டும் ரூ.1,960 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.11,825-க்கும், ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியும் கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்து வரும் தங்கம்
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025-ல் தங்கம் 45 சதவீதம் வரை விலை உயர்வும், வெள்ளி 50 சதவீதம் வரை விலை உயர்வையும் அடைந்துள்ளது. தங்கம் விலை இதே வேகத்தில் உயர்ந்து வரும் பட்சத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யும் நிலை உருவாகும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர். அதன்படி, தற்போது ஒரு சவரன் ரூ,94,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் புதிய உச்சமாக ரூ.1 லட்சத்தை எட்டும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : Gold Price: எகிறும் தங்கம் விலை.. அதிரடி விலை உயர்வுக்கு காரணம் என்ன..?
ரூ.95,000-த்தை நெருங்கிய தங்கம் விலை
- அக்டோபர் 10, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,340-க்கும், ஒரு சவரன் ரூ.90,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 11, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 12, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 13, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,580-க்கும், ஒரு சவரன் ரூ.92,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- அக்டோபர் 14, 2025 – ஒரு கிராம் தங்கம் ரூ.11,825-க்கும், ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Silver Price : 2025-ல் தங்கத்தை விட அதிக லாபம் தந்த வெள்ளி.. காரணம் இதுதான்!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
இன்று (அக்டோபர் 14, 2025) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,825-க்கும், ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206-க்கும் ஒரு கிலோ ரூ.2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக தங்கத்தை விட வெள்ளி மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.