Gold Price : ஈரான் போர் நிறுத்தம் எதிரொலி.. அதிரடியாக விலை உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி!
Gold and Silver Price Increased In Chennai | ஈரான் போர் நிறுத்தம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. ஈரான் போரல் தொடர் சரிவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி தற்போது உயர்வை சந்தித்துள்ளது.
சென்னை, மார்ச் 25 : ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (மார்ச் 25, 2026) அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) அறிவித்தது முதலே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கம் வெள்ளி மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஈரான் போர்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக, உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உலக முதலீட்டாளர்களின் கவனம், தங்கத்தின் பக்கம் இருந்து கச்சா எண்ணெயின் பக்கம் திரும்பியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் உயர தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க : ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!




கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 16 மார்ச் 2026 | ரூ.14,170 | ரூ.1,17,680 |
| 17 மார்ச் 2026 | ரூ.14,650 | ரூ.1,17,200 |
| 18 மார்ச் 2026 | ரூ.14,570 | ரூ.1,16,560 |
| 19 மார்ச் 2026 | ரூ.13,900 | ரூ.1,11,200 |
| 20 மார்ச் 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| 21 மார்ச் 2026 | ரூ.13,620 | ரூ.1,08,960 |
| 22 மார்ச் 2026 | ரூ.13,620 | ரூ.1,08,960 |
| 23 மார்ச் 2026 | ரூ.13,340 | ரூ.1,06,720 |
| 24 மார்ச் 2026 | ரூ.13,250 | ரூ.1,06,000 |
| 25 மார்ச் 2026 | ரூ.13,600 | ரூ.1,08,800 |
இதையும் படிங்க : போர் நிறுத்தம் எதிரொலி.. ஒரே நாளில் 2 முறை குறைந்து 1 முறை உயர்ந்த தங்கம்!
அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.13,600-க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும் விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. அதாவது வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.