AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய நிலவரம் இதோ..

Gold Price: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 உயர்ந்து ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது, நீண்ட கால முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்தாலும், சாதாரண எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய நிலவரம் இதோ..
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Apr 2026 10:19 AM IST

Gold Price Today: தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, நாளை அக்‌ஷய திருதியை முன்னிட்டு நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு, இந்தத் திடீர் விலை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஒரே ஆண்டில் 36% லாபம்.. 2025 அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்களுக்கு இவ்வளவு லாபமா?

இன்றைய தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 உயர்ந்து ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 உயர்ந்து ஒரு சவரன் 1,14,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:

அதன்படி, இன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 5 உயர்ந்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், கிலோ 2,80,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

விலை உயர்வுக்கான காரணங்கள்:

உலகளாவிய பொருளாதாரச் சூழல், சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்றவை தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளன. மேலும், திருமண சீசன் மற்றும் அக்‌ஷய திருதியைக்கான தேவை அதிகரிப்பும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது, நீண்ட கால முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்தாலும், சாதாரண எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலை குறைக்க முயன்ற போர் நிறுத்தம்:

லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் சர்வதேசச் சந்தையில் ஒரு சிறு நிம்மதியைக் கொடுத்துள்ள போதிலும், இந்தியாவைப் பொறுத்தவரை அக்‌ஷய திருதியை பண்டிகையின் அதீத தேவையே இன்றைய விலை உயர்வுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. போர் நிறுத்தம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், இந்த விலை உயர்வு இன்னும் அதிகமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதாவது, போர் நிறுத்தம் விலையைக் குறைக்க முயன்றாலும், அக்‌ஷய திருதியை தேவையானது அந்த விலைக் குறைப்பைத் தடுத்து விலையை மேலே தள்ளியுள்ளது.

இதையும் படிக்க : தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது எப்படி?.. இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

அட்சய திருதியை 2026:

இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், ஏப்ரல் 19, காலை 10.49 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. தொடர்ந்து, ஏப்ரல் 20, காலை 07.27 மணிக்கு திரிதியை திதி முடிவடைகிறது. தங்கம் வாங்க உகந்த நேரம் என்றால், ஏப்ரல் 19 காலை 10.49 மணி முதல் ஏப்ரல் 20 அதிகாலை 06:14 மணி வரை மிகவும் சிறப்பான நேரமாகக் கருதப்படுகிறது. மகாலட்சுமி குடியிருக்கும் பொருளாகத் தங்கம் கருதப்படுவதால், இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது.

Follow Us