Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

02 May 2026 11:17 AM

 IST

சென்னை, மே 02 : மேற்கு ஆசியா போர் (West Asia War) எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

பங்குச்சந்தை, புவிசார் பதற்றம் ஆகியவை தங்கத்தின் விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாக உள்ளன. அந்த வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் புவிசார் பதற்றம் நிலவி வருகிறது. இது தங்கத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் – எப்படி பயன்படுத்துவது

தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா?

தங்கம் என்பது சிறந்த லாபத்தை வழங்க கூடிய முதலீடாக உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். குறிப்பாக நீண்ட காலத்தை கணக்கில் கொண்டு முதலீடு செய்யும் நபர்களுக்கு தங்கம் சிறந்த லாபத்தை கொடுக்கும். குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த லாபம் கிடைக்காது. எனவே நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்பவர்கள் சிறந்த லாபத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..