Aadhaar Card : பயோமெட்ரிக் அப்டேட்.. ஒரு ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.. UIDAI அசத்தல் அறிவிப்பு!
Aadhaar Biometric Update for Free | ஆதாரில் உள்ள பயொமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டுக்கு இலவசமாக பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. காரணம் ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, வயது, பாலினம், பயோமெட்ரிக் விவரங்கள் என ஒருவரின் அனைத்து தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதன் காரணமாக தான் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identity Authority of India) நிர்வகித்து வரும் நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார்
இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும் அட்டை தான் ஆதார் என அழைக்கப்படுகிறது. இந்த ஆதார் முக்கிய அடையாள ஆவணமாக உள்ள நிலையில், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் இது இணைக்கப்பட அரசு தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில், அதில் உள்ள தகவல்கள் மிக சரியாகவும், மற்ற ஆவணங்களுடன் ஒத்துபோக வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஒருவேளை ஆதாரில் உள்ள விவரங்கள் மற்ற ஆவணங்களில் இருக்கும் விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால் பெரிய சிக்கல் ஏற்படும்.
இதையும் படிங்க : PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?
பயோமெட்ரிக் அப்டேட் – ஒரு ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்
ஆதார் கார்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சிறிவர்கள் 15 வயதை நிரம்பியதும் அவர்களது கைரேகை, கண் விழி ஆகியவை மாற்றமடையும். எனவே பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்களது பிள்ளைகள் 15 வயதை நிறைவடையும்போது பயோமெட்ரிக் தகவல்கல்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
அதாவது அடுத்த ஒரு ஆண்டுக்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்களது பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவகரங்களை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முக்கிய மாற்றம் அக்டோபர் 01, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் செப்டம்பர் 30, 2026 வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.