பிளிப்கார்ட் உடன் களமிறங்கும் போக்கோ.. ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!
Flipkart Big Billion Days 2025 | பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலின் மற்றொரு சிறப்பு அம்சமாக போக்கோ நிறுவனமும் தனது சேலை அறிவித்துள்ளது. போக்கோ ஃபெஸ்டிவ் மேட்னஸ் என்ற பெயரில் பிளிப்கார்டில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வழங்க உள்ளது.

பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான தனது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது (Big Billion Days Sale 2025). இந்த சேல் செப்டம்பர் 23, 2025 முதல் தொடங்க உள்ளது. பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) மற்றும் பிளிப்கார்ட் பிளாக் (Flipkart Black) பயன்படுத்தும் நபர்கள் முன்னதாகவே இந்த சேலில் பயன்பெற முடியும். பிளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளதன் ஒரு பகுதியாக போக்கோ நிறுவனம் தனது போக்கோ ஃபெஸ்டிவ் மேட்னஸ் (Poco Festive Madness) சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் போக்கோ எக்ஸ்7 ப்ரோ, போக்கோ எம்7 5ஜி, போக்கோ எம்7 பிளஸ் 5ஜி மற்றும் போக்கோ எஃப்7 5ஜி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் கூடுதல் சலுகை வழங்கும் போக்கோ
பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேல் செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்கும் என அறிவித்துள்ள நிலையில், போக்கோ இந்த சேலை பயன்படுத்தி தனது ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேலில் போக்கோவின் சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்கள் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் என்றும், இந்த ஸ்மார்ட்போன்களுக்கு No Cost EMI வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவுக்கு சலுகை வழங்கப்படும் என்பது குறித்து செப்டம்பர் 15, 2025 அன்று அறிவிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : Flipkart Big Billion Days: மாபெரும் சலுகை விற்பனை – ஐபோன் 16க்கு குவியும் ஆஃபர்கள்!




சலுகை பெறும் ஸ்மார்ட்போன்கள்
போக்கோ எஸ்7 5ஜி
போக்கோ எஸ்7 5ஜி (Poco S7 5G) ஸ்மார்ட்போன் 2025, ஜனவரி மாதம் ரூ.27,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் அம்சம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6,550 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
போக்கோ எம்7 5ஜி
போக்கோ எம்7 5ஜி (Poco M7 5G) ஸ்மார்ட்போன் மார்ச் மாதத்தில் ரூ.9,999-க்கு அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை சிறப்பு அம்சங்களா.. வெறும் ரூ.6,099-க்கு அறிமுகமான லாவா யுவா ஸ்மார்ட் 2!
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.13,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன் 6எஸ் 3 Soc அம்சத்தை கொண்டுள்ளது.
போக்கோ எஃப் 7 5ஜி
போக்கோ எஃப் 7 5ஜி (Poco F7 5G) ஸ்மார்ட்போன் ஜுன் மாதத்தில் ரூ.31,999-க்கு அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன் 8எஸ் கென் 4 பிராசசரை கொண்டுள்ளது.