FD Schemes : ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI.. FD திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதங்கள் இதோ!

Fixed Deposit Interest Rates April 2025 | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் சில வங்கிகள் தங்களின் எஃப்டி வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்த நிலையில், எஃடிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

FD Schemes : ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI.. FD திட்டங்களின் தற்போதைய வட்டி விகிதங்கள் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Apr 2025 21:33 PM

 IST

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படுவதால் ஏராளமான மக்கள் இவற்றில் முதலீடு செய்கின்றன. ஆனால், சமீபத்தில் ரெப்போ (Repo Rate) வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், அதன் எதிரொலியாக வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. அதாவது ரெப்போ வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் வங்கிகள் எஃப்டி திட்டங்களுக்கு வழங்கும் வட்டியும் அதிகமாக இருக்கும். இதுவே ரெப்போ வட்டி விகிதங்கள் குறைத்தால் எஃப்டி வட்டி திட்டங்களில் வட்டியும் குறையும். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சில முன்னணி வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முன்னணி வங்கிகளின்  தற்போதைய வட்டி விகிதங்கள்

ரெப்போ வட்டி விகித குறைப்பை அடுத்து வங்கிகளின் நிலையான வைப்பு நிதி திட்டங்களின் தற்போது வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank)

கால அளவீடு  பொது குடிமக்கள் வட்டி விகிதம்  மூத்த குடிமக்கள் வட்டி விகிதம் 
1 ஆண்டு முதல் 15 மாதங்களுக்கான திட்டம் 6.60 சதவீதம் 7.10 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கான திட்டம் 7.05 சதவீதம் 7.55 சதவீதம்
18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கான திட்டம் 7.05 சதவீதம் 7.55 சதவீதம்
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கான திட்டம் 6.70 சதவீதம் 7.20 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்களுக்கான திட்டம் 6.90 சதவீதம் 7.40 சதவீதம்
2 ஆண்டுகள் 11  மாதங்கள் முதல் 35 மாதங்களுக்கான திட்டம் 6.90 சதவீதம் 7.40 சதவீதம்
2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்கான திட்டம் 6.90 சதவீதம் 7.40 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்கான திட்டம் 6.75 சதவீதம் 7.25 சதவீதம்
4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 5 ஆண்டுகளுக்கான திட்டம் 6.75 சதவீதம் 7.25 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டம் 6.50 சதவீதம் 7 சதவீதம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI – State Bank of India)

கால அளவீடு  பொது குடிமக்கள் வட்டி விகிதம்  மூத்த குடிமக்கள் வட்டி விகிதம் 
1 ஆண்டு முதல் 1 ஆண்டு 364 நாட்களுக்கான திட்டம் 6.80 சதவீதம் 7.30 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் 264 நாட்களுக்கான திட்டம் 7 சதவீதம் 7.50 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் 364 நாட்களுக்கான திட்டம் 6.75 சதவீதம் 7.25 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கான திட்டம் 6.50 சதவீதம் 7.50 சதவீதம்

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்