EFPO : ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?
EPFO New Updates | ஊழியர்கள் எளிதாக சேவைகளை பெறும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இரண்டு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைந்து வரும் நிலையில், ஊழியர்கள் சேவைகளை எளிதாக பெரும் வகையில் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது ஆதார் (Aadhaar) – யுஏஎன் (UAN – Universal Account Number) இணைப்பு, ஜாயிண்ட் டிக்ளரேஷன் முறையை எளிமையாக மேற்கொள்வது உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோடிக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறும் இபிஎஃப்ஓ
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் பெயரிலும் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களது பணியின் போதோ அல்லது பணி ஓய்வு பெற்ற பிறகோ எப்போது வேண்டுமானாலும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு சலுகைகள் உள்ள நிலையில், மேலும் சில பயனுள்ள அம்சங்களை இபிஎஃப்ஓ அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : EPFO: இனி இறந்த நபரின் குழந்தைகளுக்கு நேரடியாக பணம் கிடைக்கும் – விண்ணப்பிப்பது எப்படி?
நேரடி ஆதார் – யுஏஎன் இணைப்பு
ஆதார் மற்றும் யுஏஎன் பதிவுகளில் பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் பொருந்தக்கூடிய உறுப்பினர்கள் KYC (Know Your Customer) மூலம் ஆதார் சேர்க்கைக்காக தங்களது முதலாளியை நேரடியாக அனுகலாம். இத்தகைய சேவைகளுக்கு கூடுதல் இபிஎஃப்ஓ ஒப்புதல் எதுவும் தேவையில்லை. முன்னதாக அனைத்து தகவல்களும் சரியாக இருந்தாலும், சரிபார்ப்பு அடுக்குகள் காரணமாக தாமதம் ஏற்படும். ஆனால், தற்போது அதற்கான அவசியம் இருக்காது.
இதையும் படிங்க : UAN எண் இல்லாமலே பிஎஃப் பணம் எடுக்கலாம்.. அட இது தெரியாம போச்சே!
எளிமையாக்கப்பட்ட ஜாயிண்ட் டிக்லரேஷன் முறை
ஆதார் மற்றும் யுஏஎன் விவரங்கள் தவறாக இருக்கும் கணக்குகள், தவறான ஆதார் இணைக்கப்பட்டுள்ள கணக்குகள் குறித்த ஜாயிண்ட் டிக்லரேஷனை (JD – Joint Declaration) விதிகளை இபிஎஃப்ஓ மாற்றி அமைத்துள்ளது. ஆதார் கார்டில் தவறாக உள்ள பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை நிறுவனங்கள் திறுத்தம் செய்யலாம்.
பயனர்களின் நலனுக்காக இந்த மேற்குறிப்பிட்ட முக்கிய மாற்றங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.