ஆண்டுக்கு 30% வருமானம் – அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சிறந்ததா?
Akshaya Tiritiya : அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவது, முதலீட்டுப் பயணத்திற்குச் சிறந்த தொடக்கமாக அமையக்கூடும். ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக, தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம் சிறிய அளவுகளில் வாங்குவதே சிறந்தது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மாதிரி புகைப்படம்
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவது, முதலீட்டுப் பயணத்திற்குச் சிறந்த தொடக்கமாக அமையக்கூடும். ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக, தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம் சிறிய அளவுகளில் வாங்குவதே சிறந்தது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த விதி முதலீட்டு அபாயத்தைக் குறைப்பதுடன், நீண்ட கால அடிப்படையில் சிறந்த வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. அட்சய திரிதிய நாளில் தங்கம் வாங்கும்போது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இந்தியர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதை வெறும் சம்பிரதாயமாக மட்டும் கருதக் கூடாது. காரணம் இந்நாளில் உங்கள் முதலீட்டு பயணத்தை தொடங்கி, அதைத் தொடர்ந்து வரும் மாதங்களிலும் சிறிய அளவுகளில் தங்கம் வாங்கி சேமித்து வந்தால், நீண்ட கால அடிப்படையில் நீங்கள் கணிசமான செல்வத்தை உருவாக்க முடியும். மேலும், விலை உச்சத்தில் இருக்கும்போது ஒரே நேரத்தில் பெரிய அளவில் தங்கம் வாங்குவதால் ஏற்படும் அபாயத்தை, இந்த அணுகுமுறை வெகுவாகக் குறைக்கிறது.
இதையும் படிக்க : 2021ல் தங்கம் வாங்கியவர்களுக்கு இப்போது எவ்வளவு லாபம்? ஆச்சரிய தகவல்
30 சதவிகித வருமானம்
கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பாக ஒரு அட்சய திரிதியை முதல் அடுத்த அட்சய திரிதியை வரையிலான காலகட்டத்தில் தங்கம் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 30 சதவிகிதம் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. தங்கத்தை ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வழியாக முதலீட்டாளர்கள் கருதுவதற்கு, அதன் விலையில் தொடர்ச்சியான ஏற்றமே முக்கியக் காரணமாகும்.
அட்சய திரிதியை நாளில் ஒரு சிறிய அளவில் முதலீட்டை தொடங்கலாம். அதன்பின்னர், தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம் சிறிய அளவுகளில் தொடர்ந்து வாங்கவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலத்திலோ அல்லது தங்கத்தின் விலை குறையும்போதெல்லாம், உங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை அதிகரிப்பது ஒரு விவேகமான நடவடிக்கையாக அமையும்.
தற்போது மார்கெட் நிலவரம் என்ன?
கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, தற்போதைய சந்தை விலைகள் அதிகரித்தே காணப்படுகின்றன. இந்த நிலையில், மார்கெட்டில் 5 முதல் 10 சதவிகிதம் வரையில் விலையில் மாற்றம் ஏற்படலாம். மேலும், ஒரே நேரத்தில் பெரிய தொகையை தங்கத்தில் முதலீடு செய்வதை விட, அவ்வப்போது விலை குறையும்போது தங்கம் வாங்குவதே சிறந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க : மாறிவரும் விலை – அட்சய திருதியைக்கு தங்கத்தை முன்பதிவு செய்வது நல்லதா?
இதன் மூலம் விலை குறையும்போது தங்கம் வாங்குவீர்கள் என்பதால் தங்கம் வாங்கியதற்கான சராசரி விலை குறையும் என்பதால் முதலீட்டு அபாயத்தையும் குறைக்கிறது. இதனால் மார்கெட்டில் ஏற்ற இறங்கக்ங்களை சரியாக கணித்து தங்கம் வாங்குவது சரியான முடிவாக கருதப்படுகிறது. உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் சென்டரல் பேங்கின் கொள்முதல் நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. அதே நேரம் உயரும் வட்டி விகிதம், மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சரிவு காரணமாக தங்கத்தின் விலையில் சரிவையும் சந்தித்து வருகின்றன. ஒருவர் தங்கள் மொத்த முதலீடுகளில் 15 முதல் 20 சதவிகிதம் தங்கத்திற்கு ஒதுக்குவது புத்திசாலித்தனமாக கருதப்படுகிறது.