FD : வட்டி மட்டுமே ரூ.2 லட்சம்.. அசத்தல் எஃப்டி திட்டம்.. எப்படி முதலீடு செய்வது?
Post Office Fixed Deposit Scheme | அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம். அதில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் வட்டியை பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்கள் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்வதற்காக அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை (Saving Scheme) செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பொது வருங்கால வைப்பநிதி (PPF – Public Provident Fund), நிலையான வைப்பு நிதி ( FD – Fixed Deposit), தொடர்பு வைப்பது (RD – Recurring Deposit), சுகன்யா சம்ருதி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் சிறந்ததாக கருதப்படும் திட்டம் தான் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் நிதி இழக்கும் அபாயமும் குறைவாக உள்ளதால் சாமானிய மக்கள் முதலீடு செய்ய இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் பெற எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் பெறலாம் – எப்படி?
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பல கால அளவீடுகளை கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
- 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 6.90 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
ரூ.2 லட்சம் வட்டி பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சத்திற்கும் மேல் வட்டி பெற விரும்பினால் 5 ஆண்டுகளுக்கான திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு 7.8 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், உங்களால் சிறந்த வருமானத்தை பெற முடியும். இப்போது இந்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்தில் நீங்கள் மொத்தமாக ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டில் வட்டியாக மட்டும் ரூ.2,24,974 கிடைக்கும். இதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.5 லட்சம் சேத்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.7,24,974 கிடைக்கும். இந்த திட்டத்தை தேர்வு செய்து மேற்குறிப்பிட்ட முறைப்படி முதலீடு செய்தால் வட்டி மட்டுமே ரூ.2 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.