ரவிகிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் ரௌடி ஜனார்தனா, நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், முற்றிலும் அடையாளம் தெரியாத வித்தியாசமான தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா தோற்றமளிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக், இந்த படம் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.