Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்த விஷயங்களில் முதலீடு செய்யாதீர்கள்.. வாரன் பஃபெட்டின் பொருளாதார டிப்ஸ்!

Don't Invest in These Three Things | பெரும்பாலாப பொதுமக்கள் தாங்கள் வேலைக்கு செல்லும், தொழிலில் கிடைக்கும் பணத்தை சிறுக சிறுக சேர்த்து சில பொருட்களை வாங்குவர். அதற்காக அவர்கள் பல ஆண்டுகள் உழைத்திருப்பர். ஆனால், பொதுமக்கள் அவ்வாறு உழைத்து முதலீடு செய்யும் சில விஷயங்கள் பொருளாதாரத்தை பாதிக்கும் என வாரன் பஃபெட் கூறுகிறார்.

இந்த விஷயங்களில் முதலீடு செய்யாதீர்கள்.. வாரன் பஃபெட்டின் பொருளாதார டிப்ஸ்!
வாரன் பஃபெட்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Jul 2025 13:24 PM

உயர்ந்து வரும் விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் பொதுமக்கள் கடுமையான நிதி சவால்களை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது செலவுக்கே சரியாகிவிடுகிறது என்ற ஏக்கமும் மக்கள் மத்தியில் உள்ளது. இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக செலவழிக்காமல் அவற்றை எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பது மிகவும் அவசியம் ஆகிறது. ஆனால், பெரும்பாலான பொதுமக்களால் சேமிக்க கூட முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், தான் பொதுமக்கள் தங்களது வாழ்வில் செய்யும் 3 மிகப்பெரிய தவறுகள் குறித்து வாரன் பஃபெட் சில கருத்துக்களை கூறியுள்ளார். அந்த 3 விஷயங்களில் முதலீடு செய்வது புத்திசாலிதனமானது இல்லை என்றும், அவை நிதி இழப்பை ஏற்படுத்த கூடும் என்று அவர் கூறுகிறார்.

இந்த 5 விஷயங்களில் முதலீடு செய்யாதீர்கள் – எச்சரிக்கும் வாரன் பஃபெட்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரும், அதே சமயம் எளிமையான வாழ்க்கையை வாழும் வாரன் பஃபெட் 5 விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய கார் வாங்க வேண்டாம்

பெரும்பாலான பொதுமக்கள் தாங்கள் பொருளாதாரத்தில் சற்று உயர்ந்த நிலைக்கு சென்ற உடன் முதலாவதாக கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவர். அதற்கான போதிய பொருளாதாரம் இல்லை என்றாலும் மாத தவணை முறையிலாவது ஒரு காரை வாங்கிவிடுவர். ஆனால், புதிய கார் வாங்குவது மிகப்பெரிய பொருளாதார தவறு என வாரன் பஃபெட் கூறுகிறார். அதாவது காரை வாங்கி ஷோரூமில் இருந்து வெளியே கொண்டு வந்ததுமே அதன் மதிப்பு குறைந்துவிடும் என்றும், கார் வாங்கிய 5 ஆண்டுகளிலேயே அதன் மதிப்பு 60 சதவீதம் வரை குறைந்துவிடும் என்று பஃபெட் கூறுகிறார். வாங்கியதுமே மதிப்பு குறையும் பொருளை வாங்குவது புத்திசாலிதனம் இல்லை என்றும் பஃபெட் கூறுகிறார்.

கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டாம்

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கிரெடிட் கார்டு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறார். ஆனால், கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பொருளாதாரத்தை இழக்க செய்யும் என்று பஃபெட் எச்சரிக்கிறார். அதாவது கிரெடிட் கார்டுக்கு அதிக வட்டி விகிதக்கப்படும் நிலையில், அதன் மூலம் கடன் பெறுவது பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என பஃபெட் எச்சரிக்கிறார்.

இதையும் படிங்க : வாழ்க்கைக்கு பாரமாக மாறும் மாத தவணைகள்?.. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

பெரிய வீடு வாங்கவோ கட்டவோ வேண்டாம்

பெரும்பாலான மக்களுக்கு ஒரு பெரிய வீடு வாங்க அல்லது கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அது மிகவும் தவறான பொருளாதார நடவடிக்கை என்று பஃபெட் கூறுகிறார். காரணம் பெரிய வீடுக்கு அதிகப்படியான வரி செலுத்த வேண்டும். ஒரு பெரிய வீடு கட்டுவதற்கு அதிக பணம் செலவாகும். அதுமட்டுமன்றி, அந்த வீட்டை பராமரிப்பதற்கும் அதிக பணம் செலவாகும். இதன் காரணமாக பெரிய வீடு வாங்குவதோ அல்லது கட்டுவதோ சிறந்த முடிவாக இருக்காது என பஃபெட் எச்சரிக்கிறார்.