Budget 2026 : 2026 பட்ஜெட் குறித்து எகிறும் எதிர்பார்ப்புகள்.. இந்த விஷயத்தை நினைவு கூர்வது அவசியம்!
Central Budget 2026 Expectations Getting High | 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், 2025 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய விஷயம் குறித்து தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் (Central Government Budget Session) ஜனவரி 28, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (2026 Central Budget) தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் வருமான வரி செலுத்தும் நபர்கள், தொழில் செய்யும் நபர்கள், நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் அரசின் அறிவிப்புகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த வருமான வரி விலக்கு குறித்த சில முக்கிய விஷயங்களை தெரிந்துக்கொள்ள் வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
2025 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அளித்த அரசு
2025-ன் மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமான பெறும் நபர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது புதிய வருமான வரியின் கீழ் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமான பெறும் நபர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார். இந்த விலக்கு வேலை செய்து அதற்கான வருமான பெறுவதற்கு மட்டுமே பொருந்தும். முதலீடு செய்து வருமானம் ஈட்டியிருந்தால் அதற்கு பொருந்தாது.
இதையும் படிங்க : Silver : வெள்ளி வாங்கும் திட்டமா?.. இதனை கவனியுங்கள்.. அடுத்த சில மாதங்களில் தலைகீழாக மாற போகும் நிலை!




உங்களது ரூ.12 லட்ச வருமானம் முழுவதும் வரி விலக்கு பெறாது
2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் ஒருசில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2025 வருமான வரி விலக்கு குறித்து சில விஷயங்களை தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது. புதிய வருமான வரியின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்கு மாத வருமானம் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே. மாத வருமானம், பென்ஷன், தொழில் வருமானம் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் சிறப்பு வட்டி வருமானம், முதலீட்டுக்கான லாபம் ஆகியவை இதில் அடங்காது.
இதையும் படிங்க : ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் பிஎஃப் வரம்பு? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
நீங்கள் ஒரு ஆண்டில் ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளீர்கள். அதில் ரூ.9 லட்சம் உங்களது ஊதியத்தில் இருந்து வந்தது, மீதமுள்ள ரூ.3 லட்சம் நீங்கள் முதலீடு செய்ததன் லாபம் என்றால் நீங்கள் அந்த ரூ.3 லட்சத்திற்கான வரியை செலுத்த வேண்டும். ஆனால், நீங்கள் ஊதியமாக பெற்ற ரூ.9 லட்சத்திற்கு எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.