புதிய கார் டெலிவரி செய்யும் போது விபத்து நடந்தால் யார் இழப்பீடு தருவார்கள்?

Vehicle Damage Claim: சமீபத்தில் டெல்லியில் மஹிந்திரா தார் கார் டெலிவரியின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து டெலிவரியின் போது விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய கார் டெலிவரி செய்யும் போது விபத்து நடந்தால் யார் இழப்பீடு தருவார்கள்?

மாதிரி புகைப்படம்

Published: 

13 Sep 2025 16:19 PM

 IST

புதிய கார் வாங்கும்போது டெலிவரி நேரத்தில் விபத்து நடந்தால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் சமீபத்தில் நிர்மான் விஹாரில் நடந்த விபத்து மக்களிடையே இந்த கேள்வி எழ காரணமாக அமைந்தது. மஹிந்திரா தார் (Mahindra Thar) கார் வாங்கிய வாடிக்யைாளர், ஷோரூமில் காரை வெளியே எடுப்பதற்கு முன் டயரில் எலுமிச்சை வைத்து ஏற்றும் சடங்கு ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் தவதுறதலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்த, கார் நேராக மாடியில் இருந்து கார் தலைகீழாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கார் கடுமையாக சேதமடைந்தது. காரில் ஏர் பேக் இருந்ததால் வாடிக்கையாளர் சிறிய காயங்களுடன் தப்பினார். இந்த நிலையில் அந்த காருக்கான இழப்பீடுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது

காருக்கான இன்சூரன்ஸ் எப்போது தொடங்கும்?

பொதுவாக ஒரு வாடிக்கையாளர் புதிய கார் வாங்கும்போது, காருக்கான இன்சூரன்ஸ் முன்பே பதிவு செய்யப்பட்டு, டெலிவரிக்கு முன்பே செயல்படுத்தப்படும். இதனால் கார் ஷோரூமில் இருந்து வெளியே வரும் போது அந்த நொடியில் இருந்தே இன்சூரன்ஸ் செயல்பட தொடங்கும். இதன் காரணமாக டெலிவரி தருணத்தில் அல்லது ஷோரூமில் இருந்து வெளியேறிய உடனே விபத்து ஏற்பட்டாலும் அந்த சேதத்தை காப்பீடு நிறுவனம் ஈடு செய்கிறது.

இதையும் படிக்க : ஜிஸ்டி வரி குறைப்பு…. கார்களின் விலையை அதிரடியாக குறைத்த வோல்க்ஸ்வேகன் – எவ்வளவு தெரியுமா?

பொறுப்பு யாருக்கு ?

சட்டப்படி வாகனம் உரிமையாளர் பெயரில் பதிவு செயப்பட்டு, காப்பீடுகள் போடப்பட்டு சாவி வழங்கப்பட்டதும். வாகனத்தின் உரிமையும் பொறுப்பும் வாடிக்கையாளர்களுக்கு மாறிவிடுகிறது. வாகனம் பதிவு செய்யப்பட்டு காப்பீடு தொடங்கியிருந்தால், விபத்து உள்ளிட்டவை நேர்ந்தால் அதன் முழு பொறுப்பும் வாடிக்கையாளர்களுக்கே சேரும். அதே நேரம்  வாகனத்தை பதிவு செய்யப்படாமல், காப்பீடு நடைமுறை இன்னும் முடிக்கப்படாமல் இருந்தால் அதன் முழு பொறுப்பும் ஷோரூம் அல்லது டீலரையே சேரும்.

பெரும்பாலான நேரங்களில் டெலிவரிக்கு முன்பே வாகனம் பதிவு செய்யப்பட்டு, காப்பீடு பணிகள் முடிக்கப்படுகின்றன.  எனவே விபத்து நேர்ந்தால் அந்த காப்பீடு நிறுவனம் சேதத்தை ஈடு செய்கிறது.

இதையும் படிக்க :  ஜிஎஸ்டி குறைப்பு – எந்ததெந்த மாடல் கார்களின் விலை குறையும்? முழு விவரம்

காப்பீடு கோரிக்கை செய்யும் முறை

விபத்து நடந்த உடனே காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். அதோடு, போலீஸ் புகார் அளிக்கப்பட்டு, அதன் பதிவு உங்களிடம் இருக்க வேண்டும். மேலும் விபத்து நடந்த போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது நமக்கு கூடுதல் நன்மை அளிக்கும். மேலும் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இதனையடுத்து காப்பீடு நிறுவனம் அதற்காக ஒருவரை அனுப்பி சேதத்தை மதிப்பீடு செய்யும். பின்பு இழப்பீடு தொகையை வழங்கும் நடைமுறை தொடங்கும். சரியான தகவல் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டால் எந்த சிக்கலும் இல்லாமல் நமக்கு இழப்பீடு கிடைக்கும்.