வரி சலுகை பெற உதவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள்!
வரிச்சலுகை கிடைக்கும் மற்றும் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் 7 சிறந்த முதலீட்டு தேர்வுகளை இங்கே காணலாம். வரிச்சலுகைக்காக முதலீடுகளை தேர்வுசெய்யும் போது சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக வருமானத்துக்கான திட்டங்களில் சிறிய அளவு ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.

சிறந்த முதலீட்டு திட்டங்கள்
பொதுவாக, நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பெரிய பகுதி வரிகளாக செல்கிறது என்ற கவலை அனைவரிடமும் இருக்கும். மாதம் வருமானம் கிடைக்கும் போதெல்லாம் அதன் ஒரு முக்கியமான பகுதி வரி (Tax) கட்டுவதற்காக ஒதுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், சம்பாதித்ததிலும் பெரும்பாலும் குறைவாகவே நம் கைக்கு வரும். ஆனால், இந்த வரி சுமையில் இருந்து விடுபட சில வழிகள் இருக்கின்றன. பலருக்கு, இந்த வரிச் சேமிப்பு முறைகள் (Savings) பற்றிய விவரங்கள் சரியாக தெரியாமல் இருக்கும். வரிகளை குறைத்து, அதே சமயம் நல்ல முதலீடுகளின் (Investment) மூலம் வருங்காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது மிக முக்கியம். சில முக்கியமான வரிச்சேமிப்பு வாய்ப்புகள் பற்றியும், அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் புரிந்துகொண்டால், நாம் சம்பாதிக்கும் தொகையில் அதிக பங்கு நம்மிடமே இருக்கச்செய்யலாம். எனவே, வரி சேமிக்கும் நுட்பங்களை அறிந்து அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம்.
இந்தியாவில் வரிச்சலுகை கிடைக்கும் மற்றும் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவும் 7 சிறந்த முதலீட்டு தேர்வுகளை இங்கே காணலாம். வரிச்சலுகைக்காக முதலீடுகளை தேர்வுசெய்யும் போது சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக வருமானத்துக்கான திட்டங்களில் சிறிய அளவு ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.
பொது தொகுப்பு நிதி (Public Provide Fund)
இது அரசு ஆதரவு பெற்ற ஒரு முழுமையான பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இது வருடத்திற்கு 7.1% வருமானத்தை வழங்குகிறது. இதன் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் என்பதால் இது நீண்ட கால முதலீட்டை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதன் மூலம் வட்டி மற்றும் முதன்முதலீட்டு தொகைக்கு முழுமையாக வரிவிலக்கு கிடைக்கும். பழைய வரி முறையின் கீழ், ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கிறது. பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்கள் இதை சிறந்த முதலீடாக கருதலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System)
இது ஓய்வூதியத்திற்கான சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. இது ஆண்டுக்கு 9% முதல் 12% வரை வருமானத்தை வழங்குகிறது. மேலும் இது நீண்ட கால முதலீட்டை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு ஏற்ற தேர்வாகும். இந்த திட்டத்தின் முக்கிய நன்மை இது வழங்கும் கூடுதல் வரிச்சலுகையாகும். வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ் ரூ.1.5 லட்சம் வரிச்சலுகை மற்றும் 80CCD(1B)ன் கீழ் கூடுதலாக ரூ.50,000 வரிவிலக்கு கிடைக்கும். இதனால், ஓய்வுக்கு பிறகு நிலையான வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.
இக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் ( Equity Linked Savings Scheme )
இது நீண்ட காலத்திற்கான முதலீட்டு திட்டமிட்டமாகும். வருமானவரி சட்டம் 80Cன் கீழ், இந்த திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் வரிவிலக்கு கிடைக்கும். சந்தை சார்ந்த முதலீடாக இருப்பதால், இதில் சில ஆபத்துகள் இருக்கலாம். ஆனால் வழக்கமான நிலையான வருவாய் முதலீட்டு முறைகளை விட அதிக லாபத்தை வழங்கும் திறன் கொண்டது. இதில் சிறிது ஆபத்து இருப்பதை கருத்தில் கொள்வது நல்லது.
சுகன்யா சம்ருத்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana )
இது பெண்களின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு 7.6% வருவாய் கிடைக்கும். இந்த திட்டத்தின் இதன் சேமிப்பு காலம் 21 ஆண்டுகள் அல்லது பெண்ணின் திருமணம் வரை நீடிக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம் பிரிவு 80C -ன் கீழ் வரி விலக்கு பெறலாம். மேலும் இந்த முதலீட்டில் கிடைக்கும் வருவாய்க்கு முழுமையாக வரி விலக்கு கிடைக்கும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate )
இது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு 6.8% வருவாய் கிடைக்கும். இந்த திட்டத்தின் முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள். இதில் முதலீடு செய்வதன் மூலம் Section 80Cன் கீழ் வரிவிலக்கு பெறலாம். எனவே இது நிலையான வருவாய் மற்றும் வரிச்சலுகை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme)
இது முதியோர்களுக்கு உருவாக்கப்பட்ட சிறந்த திட்டமாகும். இதன் மூலம் ஆண்டிற்கு 7.4% வருவாய் கிடைக்கும். இது நிலையான வைப்பு திட்டங்களை (Fixed Deposit) விட அதிக வட்டியளிக்கிறது. இந்த திட்டத்தின் சேமிப்பு காலம் 5 ஆண்டுகளாகும்.
5 வருட வரி சேமிப்பு பேங்க் பிக்சட் டிபாசிட் (5 Years Bank Tax Saving Fixed Deposit )
இது நிலையான வருவாயும் குறைந்த அபாயமும் கொண்ட முதலீடாக கருதப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோருக்கு ஏற்ற தேர்வாகும். இதன் முதலீட்டுக் காலம் 5 ஆண்டுகள். இதன் மூலம் 5.5% முதல் 7.75% வரையான வருவாய் அளிக்கிறது. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் வட்டி வரிக்குட்பட்டதாக இருக்கும்.