Bank Holiday : ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. பட்டியல் இதோ!

8 Days Bank Holiday in August 2025 | ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், 2025 ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆக்ஸ்ட் மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

Bank Holiday : ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

26 Jul 2025 15:37 PM

இந்தியாவில் பொதுமக்களின் பிரதான தேவையாக வங்கிகள் உள்ள நிலையில் அரசு விடுமுறை, பண்டிகளைகள், வார விடுமுறைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தில் உள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த விடுமுறைகள் தீர்மானம் செய்யப்படும். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் 8 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை

  • ஆகஸ்ட் 3, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 9, 2025 – வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் என்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 10, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 15, 2025 – நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 17, 2025 – ஞாயிற்று கிழனை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 24, 2025 – ஞாயிற்று கிழனை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 30, 2025 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் என்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 31, 2025 – ஞாயிற்று கிழனை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : PAN Card : உங்கள் பான் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா?.. கண்டுபிடிப்பது எப்படி?

வங்கி விடுமுறையின் போது என்ன செய்யலாம்

பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சேவைகளில் ஒன்றாக வங்கி சேவை உள்ளது. இந்த நிலையில், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் வங்கிகளுக்கு மட்டுமே சென்று செய்யக்கூடிய வேலைகள் செய்ய முடியாமல் போகலாம். எனவே வங்கி விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப திட்டமிடுவது மிக சரியானதாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் இந்த 8 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்றாலும் வங்கிகளின் இதர சேவைகளாக ஏடிஎம் (ATM – Automated Teller Machine), ஆன்லைன் பேங்கிங் (Online Banking) ஆகியவை வழக்கம் போல செயல்படும்.

இதையும் படிங்க : UPI : யுபிஐ பண பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா.. சர்வதேச நிதியம் அறிக்கை!

எனவே, இந்த விடுமுறை நாட்களில் வங்கி சேவைகளை பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள் மொபைல் செயலிகள் (Mobile Apps), ஆன்லைன் பேங்கிங் மற்றும் ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.