சேமிப்பின் 10-30-50 விதி என்றால் என்ன?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
10-30-50 Savings Rule | பெரும்பாலான பொதுமக்கள் நிதி சேமிப்புக்கும் செலவுகளுக்கும் மத்தியில் மிகுந்த குழப்பமடைகின்றனர். இந்த நிலையில், எதிர்கால தேவைக்கு ஏற்ப நிதி மேலான்மை செய்யும் 10-30-50 சேமிப்பு விதி என்றால் என்ன அதனை பயன்படுத்தி சேமிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால், தங்களது தற்கால தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டுமா அல்லது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டுமா என்று பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், எதிர்கால தேவைக்காக 10-30-50 விதியை பின்பற்றி சேமிப்பது எப்படி என்பது குறித்து Edelweiss மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறும் சில டிப்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேமிப்புக்கும் செலவுக்கும் மத்தியில் குழம்பும் பொதுமக்கள்
பெரும்பாலான பொதுமக்கள் சேமிப்புக்கும், செலவுக்கும் மத்தியில் மிகுந்த குழப்பம் அடைகின்றனர். அதாவது சிலர் தங்களது எதிர்காலம் நிதி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று முதலீடு செய்ய நினைக்கின்றனர். ஆனால் சிலர் நிகழ்கால வாழ்க்கையை வாழ நினைக்கின்றனர். சேமிப்பதற்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால் நிகழ்கால வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால, Edelweiss மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரேக்கா குப்தா 10-30-50 விதியை பின்பற்றி எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இதையும் படிங்க : திருமணத்துக்காக லோன் வாங்கப்போறீங்களா? இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
சேமிப்பில் 10-30-50 விதி என்றால் என்ன?
ரேக்கா குப்தா தனது Mango Millionaire புத்தகத்தில் உள்ள 10-30-50 விதியை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
20களில் 10 சதவீதம் சேமியுங்கள்
பெரும்பாலான இளைஞர்கள் சேமிப்பு அல்லது முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அது அவர்களது நிதி நிலையை முற்றிலும் பாதுகாக்கும். எனவே, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் தங்களது 20களில் 10 சதவீதம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று கூறுகிறார். அப்படி இல்லையென்றால் 1 சதவீதமாவது சேமிக்க வேண்டும் என்று கூறுகிறார். இது சேமிப்பை பொருத்தது இல்லை என்றும், சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார்.
இதையும் படிங்க : கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் கடன் வாங்குவதில் சிக்கலா? இந்த எளிய வழிகளை டிரை பண்ணுங்க!
30களில் 30 சதவீதம் சேமியுங்கள்
பெரும்பாலான நபர்கள் தங்களது 30களில் திருமணம் செய்து விடுவர். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் அளவுக்கு நிதியை மேம்படுத்த வேண்டும் என்றால் 30 வயதில் இருக்கும் நபர்கள் தங்களது வருமானத்தில் இருந்து 30 சதவீதம் பணத்தை சேமிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
40களில் 50 சதவீதம் சேமியுங்கள்
40களில் இருக்கும் நபர்களுக்கு தனி குடும்பம் உருவாகியிருக்கும். குழந்தைகளின் படிப்பு செலவு, எதிர்கால தேவைகள் என பல நிதி தேவைகள் ஏற்படும். எனவே அது முக்கியமான காலக்கட்டமாக கருதப்படும் நிலையில், ஒவ்வொருவரும் தங்களது 40களில் 50 சதவீத பணத்தை சேமிக்க வேண்டும் என்று கூறுகிறார்.