உலகில் முதலில் புத்தாண்டு கொண்டாடும் நாடும் எது? இந்தியாவுக்கு எந்த இடம்?

Global New Year Timeline: உலகம் முழுவதும் மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் உலகில் முதலில் புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எது? இந்தியாவுக்கு எந்த இடம் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உலகில் முதலில் புத்தாண்டு கொண்டாடும் நாடும் எது? இந்தியாவுக்கு எந்த இடம்?

மாதிரி புகைப்படம்

Published: 

31 Dec 2025 17:06 PM

 IST

உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் வருவதில்லை என்பது பலருக்கு ஆச்சரியமான உண்மை. பூமியின் சுழற்சி மற்றும் சர்வதேச தேதி கோடு காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டம் சுமார் 26 மணி நேரம் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. பசிபிக் தீவுகளில் தொடங்கி, அமெரிக்காவின் தொலைதூர பகுதிகளில் முடிவடையும் இந்த உலகளாவிய கொண்டாட்ட வரிசையில், இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் உலகில் புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடு கிரிபாட்டி (Kiribati). இந்நாட்டில் உள்ள கிரிபாட்டி தீவு UTC+14 நேர மண்டலத்தில் இருப்பதால் உலகிலேயே முதலில் புத்தாண்டை கொண்டாடும் இடமாகும். சர்வதேச தேதி கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவில், பெரிய பட்டாசு வெடித்துக்கொண்டாடுவதில்லை. மிக அமைதியாக அங்கு புத்தாண்டை வரவேற்கின்றனர்.

உலகில் புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடுகள்

கிரிபாட்டித் தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தில் புத்தாண்டை வரவேற்கிறது. பிரமாண்ட பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் நடைபெறும். சதம் தீவு பகுதியில், நியூசிலாந்தை விட சிறிது முன்பாகவே புத்தாண்டு வருகிறது.

அதன்பின் ஆஸ்திரேலியாவில் சிட்னி துறைமுகம் பகுதியில் நடக்கும் புத்தாண்டு பட்டாசு காட்சிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் நேரலையாக பார்க்கப்படுகின்றன. கடற்கரை பகுதிகளில் நடைபெறும் பிரமாண்ட விழாக்கள் ஆஸ்திரேலிய புத்தாண்டு கொண்டாட்டத்தின் அடையாளமாக இருக்கிறது.

கிழக்கு ஆசியாவில், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் புத்தாண்டை வரவேற்கின்றன. ஜப்பானில் புத்தாண்டு நாளன்று புத்த கோவில்களில் 108 முறை மணி அடிப்பது பாரம்பரியமாக உள்ளது. தென் கொரியாவில், கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கூடிய பெரிய இசை நிகழ்ச்சிகளும் புத்தாண்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் டிசம்பர்  டிசம்பர் 31 இரவு நகரமெங்கும் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறும். சீனாவில் லுனார் புத்தாண்டு முக்கியமானது என்றாலும், பெருநகரங்களில் இந்த புத்தாண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் புத்தாண்டு எப்போது?

இந்த வரிசையில், இந்தியா UTC 5:30 நேர மண்டலத்தில் உள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவுக்கு முன்பாக இந்தியாவில் புத்தாண்டு வருகிறது. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் இசை நிகழ்ச்சிகள், பட்டாசுகள், குடும்பச் சந்திப்புகள், பார்ட்டிகள் என பல்வேறு விதங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. உலக புத்தாண்டு காலவரிசையில் இந்தியா நடுப்பகுதியில் இடம் பெறுகிறது.

ஐரோப்பாவில், UTC+0 முதல் UTC+2 வரை பல நேர மண்டலங்களில் புத்தாண்டு வருகிறது. லண்டனில் பிக் பென் மணி ஒலிக்கும் தருணம், பாரீசில் ஈபிள் டவர் ஒளிரும் காட்சி, பெர்னிலில் பெரிய வீதி விழாக்கள் என ஐரோப்பா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும்.

தென் அமெரிக்காவில் UTC-3 முதல் UTC-5 வரை புத்தாண்டு வருகிறது. குறிப்பாக பிரேசில் நாட்டின் காப்பகோபனா கடற்கரை பகுதியில், வெள்ளை உடைகளுடன் லட்சக்கணக்கான மக்கள் கூடும் புத்தாண்டு விழா உலகப் புகழ்பெற்றதாகும்.

வட அமெரிக்காவில், UTC-5 நேர மண்டலத்தில் நியூயார்க்கில் டைம் ஸ்கொயர் பால் டிராப் நிகழ்ச்சி உலகின் மிகவும் பிரபலமான புத்தாண்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் பட்டாசுகள், கச்சேரிகள், நேரலை நிகழ்ச்சிகள் நடைபெறும். உலகில் புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் இடங்கள் அமெரிக்க சமோவா, பேக்கர் தீவு மற்றும் ஹவுலண்ட் தீவு ஆகும். கிரிபாட்டியில் புத்தாண்டு வந்ததற்கு கிட்டத்தட்ட ஒரு நாள் கழித்தே இங்கு புத்தாண்டு வருகிறது.

தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..
2025 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்.. விரிவாக பார்க்கலாம்..
விஜய்யை காண கூடிய ரசிகர்கள்.. கூட்டநெரிசலில் தடுமாறி விழுந்த விஜய்..
பாலிவுட், டாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட்.. சல்மான்கான் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்..