நைஜீரியாவை புரட்டிப் போட்ட வெள்ளம்.. 115 பேர் உயிரிழப்பு.. காலநிலை மாற்றத்தின் உச்சம்!

Nigeria Flood death toll : நைஜீரியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 115 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வெள்ளத்தில் 3,000 வீடுகள் அழிந்ததாகவும் தெரிகிறது. நீண்ட காலமாகவே நைஜீரியா நாடு கடும் வறட்சியை சந்தித்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டையே புரட்டி போட்டுள்ளது.

நைஜீரியாவை புரட்டிப் போட்ட வெள்ளம்.. 115 பேர் உயிரிழப்பு.. காலநிலை மாற்றத்தின் உச்சம்!

நைஜீரியாவில் வெள்ளம்

Updated On: 

31 May 2025 14:33 PM

 IST

நைஜீரியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் (Nigeria Flood) சுமார் 115 பேர் (Nigeria flood death toll) உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனை அடுத்து, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில்,  பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் தலைநகரான அபுஜாவிலிருந்து மேற்கே 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள நைஜர் மாநிலத்தின் மொக்வாவில் 2025 மே 29ஆம் தேதி பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வடக்கு நைஜீரியா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் அனைத்து கடும் சேதம் அடைந்தது. நைஜீரியா முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்கள் தங்க இடமின்றி, தவித்து வருகின்றனர். பலரும் தங்களது குடும்பத்தினரையும், உறவினரையும் இந்த கடும் வெள்ளத்தால் இழந்துள்ளனர்.

நைஜீரியா வெள்ளத்தால் 115 பேர் உயிரிழப்பு

இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், வீடுகள் நீரில் மூழ்கி இருப்பதையும் காட்டுகிறது. சுமார் 3,000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பேரழிவில் சிக்கி 117 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து நைஜர் மாநில அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் அவுடு ஹுசைனி கூறுகையில், “இங்கு பல உயிர்களை நாங்கள் இழந்துள்ளோம். சொத்துகள், விவசாய நிலங்கள் என பலவற்றை இழந்துள்ளோம். இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று கூறினார்.

காலநிலை மாற்றத்தின் உச்சம்

வடக்கு நைஜீரியா நீண்டகாலமாக வறட்சியை சந்தித்த வருகிறது. இதனால், அங்கு தண்ணீர் பஞ்சம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில், வெள்ளம் ஏற்பட்டு அந்நாட்டையை புரட்டி எடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றமே.  இந்த காலநிலை மாற்றத்தால் நைஜீரியா பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது. அதிக அளவில் மழை பொழிவதற்கும்,  இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும்,  வெள்ளம், பூகம்பம் ஏற்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.