PM Modi Maldives Visit: மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டம்.. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி..!

India-Maldives Relations: பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தியுள்ளது. வளர்ச்சி, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. மாலத்தீவுக்கு ரூ.4850 கோடி கடன் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PM Modi Maldives Visit: மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டம்.. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி..!

மாலத்தீவில் பிரதமர் மோடி

Updated On: 

26 Jul 2025 20:12 PM

மாலத்தீவு, ஜூலை 26: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (PM Modi) மாலத்தீவு பயணம் (Maldives Visit) இன்றுடன் (2025 ஜூலை 26) முடிவடைகிறது. பிரதமர் மோடி இன்றைய நாளில் மாலத்தீவு தலைநகர் மாலேயில் நடைபெற்ற மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிரதமர் மோடியின் மாலத்தீவின் 2வது நாளில், மாலத்தீவு துணை ஜனாதிபதி ஹூசைன் முகமது லத்தீப் (Hussain Mohammed Latheef), முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மற்றும் மக்கள் மஸ்ஜிஸ் நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் அப்துல்லா உள்ளிட்ட மாலத்தீவின் பல உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார்.

பிரதமர் மோடியின் ட்விட்டர் போஸ்ட்:

மாலத்தீவு சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், எரிசக்தி போன்ற துறைகளில் நமது நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. இது ஒரு நாட்டு மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். வரும் ஆண்டுகளில் இந்த கூட்டாண்மையை இன்னும் ஆழப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

ALSO READ: பிரமாண்டமாக தொடங்கிய உலக மலையாளி கவுன்சிலின் கூட்டம்!

தொடர்ந்து, மாலத்தீவு துணை ஜனாதிபதி ஹூசைன் முகமது லத்தீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி, மாலத்தீவுடனான தனது கூட்டாண்மையை ஆழப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. அதிபர் முய்சுவுடனான கலந்துரையாடல்களுக்கு பிறகு, மாலத்தீவுன் திறன் மேம்பாட்டில் பெரிய அளவில் உதவ இருக்கிறோம். இதன்கீழ், மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வசதி வழங்க இருக்கிறோம் என்றார்.

பிரதமர் மோடியின் வருகை சுற்றுலாவுக்கு உதவும் – முய்சு


மாலத்தீவின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு குறித்து முகமது முய்சு, “கடந்த காலங்களில் இந்தியா – மாலத்தீவுக்கு எவ்வாறு உதவியுள்ளது என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். எதிர்காலத்தில் இந்தியா மிக முக்கியமான கூட்டாணியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சுற்றுலாத் துறையில் மாலத்தீவுக்கு உதவும் முக்கிய சுற்றுலா நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடியின் வருகை அதை கணிசமாக அதிகரிக்கும். இந்தப் பயணம் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர பரிமாற்றத்தையும் பெரிதும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

ALSO READ: இங்கிலாந்து பயணம் நிறைவு.. மாலத்தீவு புறப்பட்ட பிரதமர் மோடி… பிளான் என்ன?

பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணம் சரியான நேரத்தில் வந்துள்ளது என்று மாலத்தீவு சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தோரிக் இப்ராஹிம் கூறினார். “மாலத்தீவின் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். இது இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான ஆழமான கூட்டாண்மையின் சின்னமாகும்” என்றார்.