கராச்சி: அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரபல நடிகை… நடந்தது என்ன?
Pakistani Actress Humaira Asghar: பாகிஸ்தான் நடிகை ஹுமைரா அஸ்கர் (35) கராச்சியில் உள்ள தனது குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மூன்று வாரங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தமிழாஷா கார் நிகழ்ச்சியிலும், ஜலைபி திரைப்படத்திலும் நடித்த ஹுமைரா, ஏழு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

ஹுமைரா அஸ்கர்
கராச்சி ஜூலை 10: பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை மற்றும் மாடலான ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar, Pakistani actress and model) (வயது 35), கராச்சியில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் 2025 ஜூலை 8ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். Tamasha Ghar என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும், Jalaibee என்ற திரைப்படத்திலும் நடித்த ஹுமைரா, கராச்சியின் இட்டெஹாத் கமர்ஷியல் பகுதி, பாச் VI பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளார்.
புகழ்பெற்ற நடிகையும் மாடலுமான ஹுமைரா அஸ்கர்
பாகிஸ்தான் திரைப்படத்துறையிலும், Tamasha Ghar என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் நடித்த புகழ்பெற்ற நடிகையும் மாடலுமான ஹுமைரா அஸ்கர் (வயது 35). கராச்சியில் உள்ள தனது வீட்டில் சுமார் 20 நாட்கள் கழித்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வீட்டுக்கான வாடகையை செலுத்தாமல் இருந்த காரணத்தால், அந்த வீட்டை காலி செய்ய நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவை தட்டினும் பதில் கிடைக்காததால், அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அவர்கள் எதிர்பாராத அதிர்ச்சியை எதிர்கொண்டனர். நடிகை ஹுமைரா அஸ்கர், முற்றிலும் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றத்தைப் பார்த்து சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இந்த மரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டில் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான சாட்சியம் எதுவும் இல்லையென தெரிவித்தனர். எனவே, இது கொலை சம்பவம் அல்ல என்று கருதப்படுகிறது.
அழுகிய நிலையில் காணப்பட்ட உடல்
வீட்டிலிருந்து மோசமான வாசனை பரவியதையும், வீடு முழுமையாக அமைதியாக இருந்ததையும் கவனித்த அண்டை வாசிகள், சந்தேகத்தின் பேரில் போலீசாரை அழைத்தனர். நீண்ட அழைப்புக்கு பிறகு பதில் கிடைக்காமல் போனதால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது ஹுமைராவின் சடலம் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டது.
Also Read: இனி துபாய் ஈஸியா போலாம்.. வந்தது கோல்டன் விசா.. இவ்வளவு தானா? எப்படி பெறுவது?
பாகிஸ்தான் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை
இது தொடர்பாக பாகிஸ்தான் துணை காவல் கண்காணிப்பாளர் சையத் அசாத் ரசா, சடலம் பல நாட்கள் பழையதாகத் தெரிகிறது என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலதிக பரிசோதனைக்காக சடலம் ஜின்னா பாஸ்ட் கிராஜுவேட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மர்ம மரணம் தொடர்பான போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
‘ஜலைபீ’ திரைப்படம் வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அஸ்கர்
பாகிஸ்தானில் பிரபலமாக விளங்கிய நடிகை மற்றும் மாடலான ஹுமைரா அஸ்கர், ‘தமாஷா கர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதின் மூலம் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தார். அவருடைய பிரபலத் தாக்கம் இணையத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு வெளியான ‘ஜலைபீ’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், தனது நடிப்பாற்றலை நிரூபித்து சிறந்த நடிகையாக ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.