ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்.. 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!
Pakistan Airstrikes Afghanistan | பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் சில முக்கிய மாகாணங்களின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடம்
காபூல், நவம்பர் 26 : பாகிஸ்தான் (Pakistan) மற்றும் ஆப்கானிஸ்தான் (Afghanistan) ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்னை மற்றும் கொள்கை வேறுபாடு ஆகியவற்றின் காரணமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமாகியுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே நீடித்து வரும் மோதல்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. ஆனால், தலீபான் அரசு பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதையும் படிங்க : BAPS மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 30 ஆண்டுகால கொண்டாட்டம் – தலைவர்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கள்
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஆதரவாக செயல்படுவதாக கூறி, ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இரு தரப்பு இடையே இருந்த மோதல் தற்போது மேலும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் சில முக்கியமான பகுதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஃபாசிஸ்ட் என கூறியது குறித்து கிண்டல் செய்த டிரம்ப்.. மம்தானி – டிரம்ப் சந்திப்பில் சிரிப்பலை!
ஐந்து மாகாணங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
அதாவது, ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளான பாக்டிகா, குனார் உட்பட 4 மாகாணங்களில் பாகிஸ்தான் சரமாரி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அந்த பகுதியில் இருந்த ஒரு வீடு முழுவதுமாக தரைமட்டமாகியுள்ளது. இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட அங்கு மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.