இனி ஒரு நாள் 25 மணி நேரமாக மாறலாம்.. நாசா சொன்ன ஷாக் தகவல்.. காரணம் என்ன?
One Day Can Be Extended | தற்போது பூமியில் ஒரு நாள் 24 மணி நேரமாக கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில், பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக மாறலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
வாஷிங்டன், ஏப்ரல் 24 : இனி ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என்று நாசா (NASA – National Aeronautics and Space Administration) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு நாள் 24 மணி நேரமாக கணக்கிடப்படும் நிலையில், நாசா இதனை கூறியுள்ளது. இந்த நிலையில், பூமியில் ஒருநாள் 25 மணி நேரமாக மாறலாம் என்று நாசா கூறியுள்ளது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி ஒரு நாள் 25 மணி நேரம் ஆகலாம் – நாசா
பூமி தன்னை தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அவ்வாறு பூமி தன்னை தான் சுற்றிக்கொண்டு, பூமியை சுற்றி வர சுமார் 365 நாட்கள் ஆகும். இதன் காரணமாக தான் ஒரு ஆண்டை 365 நாட்களாக கணக்கிடுகின்றனர். இந்த நிலையில், பூமி ஒவ்வொரு நாளும் தன்னை தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகும். இதன் காரணமாக தான் ஒரு நாள் 24 மணி நேரமாக கணக்கிடப்படுகிறது.
இதையும் படிங்க : US – Iran Talk: தொடரும் பேச்சுவார்த்தை பஞ்சாயத்து.. இறங்கி வராத ஈரான்.. குழப்பத்தில் அமெரிக்கா!
பூமி தன்னை, தானே சுற்றி வருவதன் அடிப்படையில் ஒரு நாள் 24 மணி நேரமாக இருக்கும் நிலையில், இனி அது ஒரு நாளுக்கு 25 மணி நேரமாக மாறலாம் என்பதை தான் நாசா தற்போது கூறியுள்ளது. ஈர்ப்பு விசையால் பூமிக்கும், நிலவுக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை விட்டு விலகி செல்வதும் தான் காரணம் என்று கூறுகின்றனர்.
பூமி தொடங்கிய காலத்தில் ஒரு நாள் 18 மணி நேரம் தான்
ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1.7 மில்லி செகண்ட் பூமியின் சுழலும் வேகம் குறைவதால், 200 மில்லியன் வருடங்களுக்கு பிறகு இது நிகழலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி தோன்றிய காலத்தில் 1 நாள் வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்ததாகவும், அது டைனோசர் காலத்தில் 23 மணி நேரமாக மாறியதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜப்பானில் 7.4 அளவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!
பூமியின் நேரம் அதிகரிக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.