அமெரிக்காவில் வீசிய பெரும் புயல்…12000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

US Major Storm: அமெரிக்காவில் வீசிய அதி தீவிர பனிப்புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் வீசிய பெரும் புயல்...12000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

அமெரிக்காவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

Published: 

25 Jan 2026 11:20 AM

 IST

அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று சனிக்கிழமை ( ஜனவரி 24) திடீரென பயங்கர புயல் வீச தொடங்கியது. இதனால், 140 மில்லியன் மக்கள் வாழும் நியூ மெக்சிகோவில் இருந்து, நியூ இங்கிலாந்து வரை குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் கிழக்கு டெக்சாஸிலிருந்து, வட கரோலினா வரை அதிகளவிலான பனிக்கட்டிகளின் தாக்கம் இருக்கும் என்று தேசிய வானிலை அறிவிப்பு மையம் அறிவித்தது. அதன்படி தென்கிழக்கு ஓக்ல ஹோமாவின் சில பகுதிகள் மற்றும் கிழக்கு டெக்சாஸ் மற்றும் லூசியானாவின் சில பகுதிகளில் சுமார் 0.6 சென்டிமீட்டர் அளவுக்கு பனிக் கட்டிகள் படர்ந்தன. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை மிக மோசமாக இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

12000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

இந்த அதி தீவிர புயலால் ஓக்லஹோமா நகரத்தில் உள்ள வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் நேற்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை வரை விமான சேவை வழங்கப்படவில்லை. பிற்பகலுக்குப் பிறகு விமான சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், விமான கண்காணிப்பு வலைத்தளமான FLIGHT AWARE-இன் படி, அமெரிக்கா முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் படிக்க: உலகின் மிகவும் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு.. 67,800 ஆண்டுகள் பழமையானது!

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களும் ரத்து

ஒரு முக்கிய மையமான டல்லாஸ்- போர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை 700- க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல, சிகாகோ, அட்லாண்டா, நாஷ்வில், சார்ட்லட், வட கரோலினா ஆகிய விமான நிலையங்கள் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த புயல் தொடர்பாக நியூ ஜெர்சியின் கவர்னர் மிகி ஷெரில் கூறுகையில், நாங்கள் இதுவரை கண்டிராத புயலை தற்போது பார்த்துள்ளோம். இந்த புயலால் வணிக வாகன பயணத்துக்கான கட்டுப்பாடுகள் நெடுஞ்சாலைகளில் மணிக்கு 35 மைல் வேகத்தில் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

1.20 லட்சம் மின் தடைகள்

மேலும், மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தினார். இந்த கடுமையான பணிகளால் கிறிஸ்பிளாங்கிற்கு வேலைக்கு செல்லும் மக்கள் 5 மணி நேரம் பயணம் மேற்கொள்ள முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தப் பகுதியில் பனிக்கட்டியால் ஏற்படும் சேதம் சூறாவளி காற்றை விட அதிகமாக இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த திடீர் பனிப் புயலால் நேற்று மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் மின் தடைகள் ஏற்பட்டதாக மின்துறை தெரிவித்துள்ளது. இதில், டெக்சாஸில் சுமார் 53 ஆயிரம் மின் தடைகளும், லூசியானாவில் 45 ஆயிரம் மின் தடைகளும் ஏற்பட்டுள்ளன.

மேலும் படிக்க: 4 ஆண்டுகளாக நீடிக்கும் போர்.. அபு தாபியில் நடக்கும் அமெரிக்கா-ரஷ்யா-உக்ரைன் மும்முனை பேச்சுவார்த்தை..

Related Stories
4 ஆண்டுகளாக நீடிக்கும் போர்.. அபு தாபியில் நடக்கும் அமெரிக்கா-ரஷ்யா-உக்ரைன் மும்முனை பேச்சுவார்த்தை..
உலகின் மிகவும் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு.. 67,800 ஆண்டுகள் பழமையானது!
ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி.. இரண்டு நாள் நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை..
ஏஐ-ஆல் வெள்ளை காலர் வேலைக்கு ஆபத்து…அரசுகள் தயாராக வேண்டும்…பில்கேட்ஸ் எச்சரிக்கை!
இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்.. பிரதமர் மோடியை பாராட்டிய அதிபர் டிரம்ப்..
ஆகஸ்ட் 12-இல் புவி ஈர்ப்பு விசை இழப்பு…மக்கள் கொத்து கொத்தாக பலியாக வாய்ப்பு?நாசா கூறுவெதென்ன!
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?