விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பை…ரூ.1.08 லட்சத்துக்கு வாங்கிய நபர்…காத்திருந்த அதிர்ச்சி!
Man Buy Unclaimed Baggage At Airport: விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பையை ரூ.1.08 லட்சத்துக்கு வாங்கிய நபருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பையில் எதிர்பார்க்காத பல்வேறு பொருள்கள் இருந்தது. எதற்காக அந்த பையை இவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்.
உலகில் உள்ள மக்களில் சிலர் சமையல் செய்வது, பயணம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு விஷயங்களில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதில், சிலரின் பொழுது போக்குகள் பொது மக்களின் ஆர்வத்தை தூண்டும் அளவுக்கு நிலைத்து நிற்கின்றன. அப்படி தொடங்கப்பட்ட ஒரு சாதாரண பொழுது போக்கு விஷயத்தால் ஒரு நபர் மிகவும் பிரபலமாகி உள்ளார். அந்த நபர் ஸ்காட் பென்சம் என்பவர் தான். இவர், விமான நிலையங்களில் கைவிடப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத பொருட்களை வாங்குவதை பொழுது போக்காக செய்து வந்தார். அதனை தனது சமூகவலைதள பக்கத்திலும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பு மக்கள் பெரும் ஆதரவு அளித்ததை அடுத்து, பொழுது போக்காக தொடங்கிய இந்த விஷயம் பின்னர் அவரது முழு நேர தொழிலாக மாறியது.
விமானநிலையத்தில் உரிமை கோரப்படாத பொருள்கள்
அதன்படி, விமான நிலையங்களில் ஏலத்தில் உரிமை கோரப்படாத பொருட்களை பென்சம் வாங்கி, அதில் உள்ள பொருட்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். மேலும், அந்த பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். காலப்போக்கில் அவரது கண்டுபிடிப்புகள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இதனால், அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மேலும் படிக்க: தலையை துளைத்துச்சென்ற துப்பாக்கி குண்டு.. உஸ்மான் ஹாடி மரணம்.. மீண்டும் வன்முறைக்களமாகும் வங்கதேசம்!




ரூ.1.08 லட்சத்துக்கு வாங்கி உரிமை கோராத பை
இவர், அண்மையில் ஒரு விமான நிலையத்தில் இருந்து உரிமை கோரப்படாத பையை ரூ. 1.08 லட்சத்துக்கு வாங்கியதை சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ 1.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் அவர் வாங்கிய பையை பார்த்த போது அதில் காலணிகள் இருப்பதாக முதலில் தெரிந்தது.
பையில் இருந்த பொருள்களால் அதிர்ச்சி
பின்னர், பையில் தேடியபோது, ஏற்கெனவே உபயோகப்படுத்தப்பட்ட சிகரெட் துண்டுகள், நாணயங்கள், ஒரு பேனா, இரு சிம் கார்டுகள், ஹெட் போன்கள், கண்ணாடிகள், பாதுகாப்பு கையுறைகள், பாட்டில் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. மேலும், தொழிலாளர்கள் பயன்படுத்தும் கருவி, ஒரு வேஷ்டி, ஒரு ஜாக்கெட், செய்தித்தாள், உணவகத்தின் பில் மற்றும் பல மின் கேபிள்கள் உள்பட வித்தியாசமான பொருட்கள் இருந்தன.
விலை உயர்ந்த பொருள்கள் என எதிர்பார்ப்பு
அந்த வீடியோவில் பேசிய பென்சன், நான் விலை உயர்ந்த பொருட்களை எதிர்பார்த்ததாகவும், ஆனால், இந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் விமான நிலையத்தில் நான் செலுத்திய பணம் திரும்ப கிடைக்கும் என்று தெரிவித்தார். இந்த வீடியோவுக்கு, பல தரப்பட்ட மக்களும் பென்சனுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: அமெரிக்காவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த சம்பவம்…குடியேற்ற முகவரின் கொடுஞ்செயல்!