அமைதிக்கான நோபல் பரிசு.. அதிபர் டிரம்ப் தான் தகுதியானவர் – பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்..

Noble Prize For Peace: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , “அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர்” என தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு.. அதிபர் டிரம்ப் தான் தகுதியானவர் - பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்..

கோப்பு புகைப்படம்

Published: 

10 Oct 2025 12:28 PM

 IST

அக்டோபர் 10, 2025: 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று (அக்டோபர் 10, 2025) தினம் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. நார்வேயில் இருக்கும் நோபல் பரிசு குழுவினர் இந்திய நேரப்படி நண்பகல் 2.30 மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு செல்ல இருக்கிறது என்பதை வெளியிட இருக்கின்றனர். உலகிலேயே மிக உயரிய விருதாக இந்த நோபல் பரிசு பார்க்கப்படுகிறது . பல்வேறு பிரிவுகளிலும் லட்சக்கணக்கான மக்களின் நலன்களுக்காகவும் அமைதிக்காகவும் பாடுபட்ட நபர்களை தேர்ந்தெடுத்து தான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருது மிகப்பெரிய அளவில் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமைதிக்கான நோபல் பரிசு:

டிரம்ப் தான் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு பொருத்தமானவர் என தொடர்ச்சியாக கூறி வருகிறார் . தான் அதிபராக பதவி ஏற்றதில் தொடங்கி பல்வேறு போர்களை நிறுத்தி இருப்பதாகவும் எனவே இந்த விருது பெறுவதற்கு தானே பொருத்தமான நபர் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். நோபல் கமிட்டி இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு செல்கிறது என்பதை இன்று (அக்டோபர் 10, 2025) அறிவிக்க இருக்கிறார்கள்.

முன்னதாக நோபல் கமிட்டியை சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றனர். டிரம்பினை பொறுத்தவரை நோபல் பரிசு அவருக்கு கிடைக்கவில்லை என்றால் அவர் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்பது தான் தற்போது பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.

மேலும் படிக்க: பிலிப்பைன்ஸில் 7.6 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..

அமைதிக்கான நோபல் பரிசு என்பது பொதுவாக யாருடைய தாக்கத்திலும் வழங்கப்படுவது கிடையாது, பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது குறிப்பிட்ட அமைப்புகளுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என பரிந்துரை செய்யலாம். ஆனால் இதற்கான கமிட்டி தான் அதில் இறுதி முடிவு எடுக்கும். ஆஃல்பிரெட் நோபல் அவர்களின் உயிலில் குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்றி தான் இந்த முடிவு எடுக்கப்படும்.

7 போர்களை நிறுத்திய எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் – அதிபர் டிரம்ப்:

இரு தினங்களுக்கு முன் தான் டிரம்ப் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை வெற்றி கரமாக கொண்டு வந்தார். இது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை பெற்று தருமா என்றால் இந்த ஆண்டு கிடையாது ஏனெனில் அதற்கு முன்னதாகவே யாருக்கு பரிசு என்பதை தீர்மானித்து விட்டார்கள் அடுத்த ஆண்டு வேண்டுமென்றால் வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?

டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு போர்களை நிறுத்தி இருப்பதாக கூறி வருகிறார். அண்மையில் ஐநா பொது சபையில் உரையாற்றிய போது கூட எனக்கு தான் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என பலரும் கூறுகிறார்கள் என தெரிவித்தார்.

நோபல் பரிசுக்கு தகுதியானவர் அதிபர் டிரம்ப் – அதிபர் நெதன்யாகு:

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , “அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர்” என தெரிவித்துள்ளார்.