Iran Vs America : அமெரிக்காவுக்கு முன்  எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது.. ஈரான் கடும் எச்சரிக்கை!

Ayatollah Khomeini warned America for Attack in Iran | ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அது குறித்து ஈரானின் உச்சபட்ச தலைவர் பதில் அளித்துள்ளார். அது குறித்து கூறியுள்ள அவர், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது. என்று கூறியுள்ளார்.

Iran Vs America : அமெரிக்காவுக்கு முன்  எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது.. ஈரான் கடும் எச்சரிக்கை!

கோப்பு புகைப்படம்

Updated On: 

22 Jun 2025 13:52 PM

 IST

தெஹ்ரான், ஜூன் 22 : ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா மிக கடுமையான தாக்குதலை (America Attack on Iran Power Plants) நடத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு நாங்கள் தாமதமின்றி உடனடியாக பதிலடி கொடுப்போம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் இந்த செயல்பாடு மத்திய கிழக்கு மற்றும் உலகிற்கு பேரழிவாக மாறக்கூடும் என ஐநா (United Nation) பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ள நிலையில், ஈரானின் எச்சரிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் தாக்குதல் நுழைந்த அமெரிக்கா – உச்சக்கட்ட பதற்றம்

அணு ஆயுத உற்பத்தி விவகாரம் தொடர்பாக ஜூன் 13, 2025 முதல் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி அணு ஆயுத தாக்குதல்களை நடத்தி வருவதால், இரண்டு நாடுகளிலும் உயிர் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் மோதலை மேலும் விரிவடைய செய்யும் விதமாக அமெரிக்கா தலையிட்டுள்ளது. அதாவது ஈரானின் மிக முக்கிய அணு உலைகள் மீது அமெரிக்கா மிக கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதன் காரணமாக அவை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக தாக்குதலை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் செய்தியாளர் சந்திப்பு

கப்பல்கள் தான் முதல் இலக்கு – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதில் அளித்துள்ள ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி , அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருக்கிறது. தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்துவோம். முதற்கட்டமான அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளார். ஈரான் தலைவரின் இந்த எச்சரிக்கை ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவி வந்த மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அமைந்துள்ளது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..