Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமைதிக்கான நோபல் பரிசு.. அதிபர் டிரம்பை பரிந்துரை செய்த பாகிஸ்தான்..

President Donald Trump: இந்தியா பாகிஸ்தான் இடையே அதிகரித்து வந்த போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்பின் பங்கு முக்கியத்துவம் வாய்தது என பாகிஸ்தான் பாராட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு.. அதிபர் டிரம்பை பரிந்துரை செய்த பாகிஸ்தான்..
அதிபர் டிரம்ப்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jun 2025 10:48 AM

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வந்த பதற்றத்தை குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (US President Donald Trump) பங்கு மிகவும் முக்கியமானது என பாகிஸ்தான் நாடு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பர்க்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை (Noble Prize For Peace) வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் தரப்பு பதிவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வந்தது. பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்:

இதில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தலைவர்கள் இருப்பிடத்தை குறிவைத்து தகர்க்கப்பட்டது. இதற்கு பதில் தாக்குதல் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய அதிநவீன கருவிகள் அந்த ட்ரோன்களை சுற்றி வீழ்த்துவதோடு தாக்குதலையும் தவிர்த்தது. இப்படி போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு நாட்கள் அந்த தாக்குதல்கள் நீடித்தது பின்னர் இரு நாடுகளும் பரஸ்பர ஒப்பந்தத்தின் படி தாக்குதலை நிறுத்திக் கொண்டனர்.

அமைதிக்கான நோபல் பரிசிற்கு டிரம்பை பரிந்துரை செய்த பாகிஸ்தான்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வந்த பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய பங்கு வகித்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருந்த பதற்றத்தை குறைக்க அவர் நேரடியாக தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் காஷ்மீர் விவகாரத்தில் சுமுக பேச்சு வார்த்தை தொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் முன்னெடுத்த நடவைடிக்கைகளையும் பாகிஸ்தான் புகழ்ந்துள்ளது. மேலும் அமைதி வேண்டி அவர் முன்னெடுக்கும் முயற்சிகள் போற்றத்தக்கது எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

கடந்து சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கன் நோபல் பரிசு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடம் கேட்ட பொழுது, நான் நான்கு அல்லது ஐந்து முறை இந்த அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் எனக்கு வழங்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை தெரிவித்த சில நாட்களுக்குப் பின் தற்போது பாகிஸ்தான் அமெரிக்க அதிபர் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதிபர் டிரம்பிடம் பேசிய பிரதமர் மோடி:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் ஆன போரை நிறுத்தியது நான்தான் என அதிபர் டிரம்ப் கூறிவந்த நிலையில் அண்மையில் இந்திய பிரதமர் அதனை மறுப்பு தெரிவித்திருந்தார் இது தொடர்பாக தொலைபேசியில் அதிபர் டிரம்பிடம் தெளிவுபடுத்தியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டுக்கும் இடையே இருந்த பிரச்சனையை இரு நாட்டுத் தலைவர்களே தீர்த்துக் கொண்டனர் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் எந்த பங்கும் இல்லை என டிரம்ப் உறுதிப்பட தெரிவித்திருந்தார்.