இந்திய கப்பல்களுக்கு எந்த சிறப்பு அனுமதியும் இல்லை.. ஈரான் விளக்கம்..
இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல்கள் சில ஊடகங்களில் வெளியாகின. மேலும் Pushpak மற்றும் Parimal என்ற இந்திய எண்ணெய் கப்பல்கள் அந்தப் பகுதியில் எந்தத் தடையும் இல்லாமல் கடந்ததாகவும், மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கோப்பு புகைப்படம்
மார்ச் 12, 2026: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான Strait of Hormuz குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்று வெளியான பல்வேறு தகவல்களில், அந்தக் கடல் வழித்தடம் வழியாக செல்லும் இந்தியக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது என கூறப்பட்டது. இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் சுமார் 40 சதவீதம் இந்த ஹோர்முஸ் கடல்சந்தி வழியாகவே கொண்டுவரப்படுகிறது என்பதால், இந்த செய்தி முக்கியத்துவம் பெற்றது.
இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சர் S. Jaishankar மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi ஆகியோர் மேற்காசியாவில் உருவாகி வரும் நிலைமை குறித்து தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
ஹார்முஸ் கடல்சந்தி வழியாக வந்த இந்திய கப்பல்கள்:
அந்த ஆலோசனைக்கு பிறகு, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக பாதுகாப்பாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல்கள் சில ஊடகங்களில் வெளியாகின. மேலும் Pushpak மற்றும் Parimal என்ற இந்திய எண்ணெய் கப்பல்கள் அந்தப் பகுதியில் எந்தத் தடையும் இல்லாமல் கடந்ததாகவும், மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க: இஸ்ரேல்-ஈரான் போர் சூழல்: பாதுகாப்பாக கடந்து சென்ற இந்திய கப்பல்… முழு விவரம் இதோ!
மறுப்பு தெரிவித்த ஈரான்:
ஆனால், இந்த தகவல்களை ஈரான் அரசு தற்போது முற்றிலும் மறுத்துள்ளது. ஈரான் அதிகாரிகள் கூறியதாவது: இந்தியக் கப்பல்களுக்கு தனிப்பட்ட அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல். எந்த நாட்டின் கப்பல்களுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை. ஹோர்முஸ் கடல்சந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு பொதுவான கடல் விதிமுறைகளே அமலில் உள்ளன என தெரிவித்துள்ளனர்.
மேலும் உலகளாவிய அளவில் மிகவும் முக்கியமான இந்த ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக உலகின் மொத்த எண்ணெய் வழங்கலில் சுமார் 20 சதவீதம் கடத்தப்படுகிறது. அதனால் இந்தப் பகுதியில் உருவாகும் பதற்றம் உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.