Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரண்டு நாட்களாக கடும் இருமளால் அவதி அடைந்த இளம் பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Indian Student's Mysterious Death in America | இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு அங்கேயே வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் மர்மமான முறையில் தனது அறையில் இறந்து கிடந்துள்ளார்.

இரண்டு நாட்களாக கடும் இருமளால் அவதி அடைந்த இளம் பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
உயிரிழந்த பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Nov 2025 07:58 AM IST

நியூயார்க், நவம்பர் 11 : அமெரிக்காவின் (America) டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் உள்ள ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் ( A and M University) இந்தியாவின் (India) ஆந்திராவை (Andhra) சேர்ந்த இளம் பெண் ஒருவர் படித்து வந்துள்ளார். இவர் தனது படிப்பை முடித்த நிலையில், அமெரிக்காவிலே வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையே தான் அவருக்கு இரண்டு நாட்களாக தொடர் இருமள் இருந்துள்ளது. இருமளுடன் சேர்ந்து கடுமையான நெஞ்சு வலியும் அவரை வாட்டி வதைத்துள்ளது.

குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் பெண்

இரண்டு நாட்களாக கடும் இருமள் மற்றும் நெஞ்சுவலியால் சிரமத்தை சந்தித்து வந்த அந்த இளம் பெண், டெக்சாஸில் உள்ள அவரது குடியிருப்பில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை கேட்டு அந்த இளம் பெண்ணின் தோழிகள் மற்றும் குடும்ப உறவிவினர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ரஷ்யாவில் காணாமல்போன இந்திய மாணவர்… 19 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு – என்ன நடந்தது?

உடலை இந்தியா கொண்டுவர நிதி திரட்டும் குடும்பத்தினர்

அமெரிக்காவில் உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர அவரது உறவினர் பெண் ஒருவர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் பபட்லா மாவட்டத்தில் வசித்து வரும் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் சிறிய அளவிலான நிலத்தில் விவசாயம் செய்து அதில் வரும் குறைவான வருமானத்தை வைத்தே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் நம்பிக்கையாக இருந்த அவர்களது மகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : மக்களை ஏமாற்றுவதற்காக தவறாக எனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர்.. பிரேசில் மாடல் விளக்கம்!

தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

அமெரிக்காவில் தங்கி வேலை செய்து வந்த இளம் பெண், மர்மமான முறையில் அவரது வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த உடல்நல குறைவால் காலமானாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணமா என்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.