தாய்லாந்து – கம்போடியா மோதல்.. இந்திய மக்களுக்கு எச்சரிக்கை!

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்களைத் தொடர்ந்து, இந்தியர்கள் அப்பகுதிக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உதவி தேவைப்பட்டால் புனோம் பென்னில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தாய்லாந்து - கம்போடியா மோதல்.. இந்திய மக்களுக்கு எச்சரிக்கை!

தாய்லாந்து - கம்போடியா

Updated On: 

26 Jul 2025 15:17 PM

கம்போடியா, ஜூலை 26: தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக அங்கு செல்வதை தவிர்க்குமாறு இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கம்போடியாவில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பில், “கம்போடியா-தாய்லாந்து எல்லையில் நடந்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் புனோம் பென்னில் உள்ள இந்திய தூதரகத்தை இந்திய குடிமக்கள் +855 92881676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் cons.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி கூறலாம் என்றும் தூதரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தாய்லாந்தில் உள்ள ஏழு மாகாணங்களுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளில் மோதல்கள் வெடித்த நிலையில் அது அங்கு வசிக்கும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்கள் நிகழ்ந்த மோதலில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானை தலைகீழாக புரட்டி போட்ட கனமழை.. ஒரே நாளில் பல உயிரிழப்புகள்!

தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

மேலும் தகவல்களுக்கு தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி பிரிவான TAT நியூஸ்ரூம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்படும் அப்டேட்டுகளை கவனிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்து – கம்போடியா பிரச்னை

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இப்பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. கடந்த 1953ம் ஆண்டு வரை கம்போடியாவை பிரான்ஸ் ஆக்கிரமித்திருந்தது. அப்போது முதன்முதலில் நில எல்லை தொடர்பான வரைபடம் உருவாக்கப்பட்டது. கம்போடியா தனது உரிமைகளை பெற அந்த வரைபடத்தை ஆதரித்தது. அதே நேரத்தில் தாய்லாந்து அதை தவறானது என்று நிராகரித்து விட்டது. இப்படியான நிலையில் தான் இரண்டு நாட்கள் எல்லை தாண்டிய மோதலுக்குப் பிறகு கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Also Read: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கைது செய்யப்படுவது போன்ற AI வீடியோவை பகிர்ந்த டிரம்ப்.. வெடித்த சர்ச்சை!

இப்படியான நிலையில் ஐ.நா. சபையில் இந்த பிரச்னை தொடர்பாக ஜூலை 26ம் தேதியான இன்று விசாரிக்க அவசர கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எல்லைப்பகுதியில் தாய்லாந்தின் ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க கம்போடியா ட்ரோன் அனுப்பியதன் விளைவாக இந்த மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் கம்போடியாவோ, தாய்லாந்து இராணுவ வீரர்கள் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.