India Pakistan Conflict : பாகிஸ்தானின் 6 நகரங்களில் இந்தியா தாக்குதல்
India’s Actions Against Pakistan : இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தானின் ஆறு முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்தியா உறுதிப்படுத்தாத நிலையில், 3 விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர் விமான நிலையம், அவன்டிபோரா வான்படை தளம், பாதன்கோட், ஃபெரோஸ்பூர், ஜெய்சல்மீர் உள்ளிட்ட 26 இடங்களை இலக்காக கொண்டு டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா உடனடியாக S-400 Triumf, Barak-8 MRSAM, ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் மூலம் டிரோன்களைத் தடுத்தன. இதில் பெரும்பாலானவை வெற்றிகரமாக வீழ்த்தப்பட்டன. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு ட்ரோன் தாக்குதலில் மூவர் காயமடைந்து உள்ளனர். இராணுவ மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகமான ட்ரோன் நகர்வுகளை கண்காணித்து, அவற்றை உடனடியாக தடை செய்தனர்.
பாகிஸ்தானின் 6 நகரங்களில் இந்தியா தாக்குதல்
இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட பாகிஸ்தானின் ஆறு முக்கிய நகரங்களில் இந்தியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்பகுதிகளில் பெரிய வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி விமானப்படை தளம் உள்ளிட்ட 3 விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா இதனை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விமானப் போக்குவரத்துக்கான வான் வெளியை மே 10, 2025 அன்று காலை 4.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
32 இந்திய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்
➡️ Temporary Suspension of Civil Flight Operations at Select Airports and Air Routes
➡️ The Airports Authority of India (AAI) and relevant aviation authorities have issued a series of Notices to Airmen (NOTAMs) announcing the temporary closure of 32 airports across northern and… pic.twitter.com/MZEfbI1YkJ
— PIB India (@PIB_India) May 9, 2025
இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களில் மே 9 முதல் மே 14 வரை அனைத்து சிவில் விமான சேவைகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட விமான நிலையங்களில் அம்ருத்சர், அம்பாலா, ஜம்மு, ஸ்ரிநகர், லே, பூஜ், பாதிந்தா, ஜோத்பூர், ஜைசல்மீர், சிம்லா, பியூண்டர் உள்ளிட்டவை அடங்கும்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
EQ of M: 4.0, On: 10/05/2025 01:44:17 IST, Lat: 29.67 N, Long: 66.10 E, Depth: 10 Km, Location: Pakistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/jVl5Y73VF9— National Center for Seismology (@NCS_Earthquake) May 9, 2025
இதற்கிடையே பாகிஸ்தானில் மே 10, 2025 சனிக்கிழமை அதிகாலை 1.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவுள்ள நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 29.67 வடக்கு அட்சரேகை மற்றும் 66.10 கிழக்கு தீர்க்கரேகையில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களில் பாகிஸ்தானைத் தாக்கும் நான்காவது நிலநடுக்கம் இதுவாகும்.