Ukraine : போர் முடிந்ததும் பதவி விலகி விடுவேன்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

Zelenskyy About Ukraine President Position | உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கியின் பதவி காலம் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், அவர் இன்னும் அதிபராக தொடர்ந்து வரும் நிலையில் போர் முடிவுக்கு வந்தது பதவி விலகி விடுவேன் என்று கூறியுள்ளார்.

Ukraine : போர் முடிந்ததும் பதவி விலகி விடுவேன்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Updated On: 

28 Sep 2025 12:22 PM

 IST

கீவ், செப்டம்பர் 28 : உக்ரைனில் (Ukraine) போர் முடிவுக்கு வந்த பிறகு நான் பதவி விலகிவிடுவேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Ukraine President Zelenskyy) தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே தற்போது வரை போர் முடிவுக்கு வராத நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இனி தான் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பதவி விலக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

போர் முடிந்ததும் பதவி விலகி விடுவேன் – ஜெலன்ஸ்கி

உக்ரைனில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெலன்ஸ்கி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, பிப்ரவரி 2024 ஆம் ஆண்டுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், அங்கு தற்போது தேர்தல் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் உக்ரைனின் அதிபராக ஜெலன்ஸ்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க : கேபிள் கார் விழுந்து விபத்து.. இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி.. இலங்கையில் சோகம்

மீண்டும் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் – ஜெலன்ஸ்கி

இந்த நிலையில் அது குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே முதல் இலக்கு. போர் முடிவுக்கு வந்த பிறகு நான் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன். அதன் பிறகு மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். ஏனெனில் தேர்தல் என்னுடைய இலக்கு அல்ல. மக்களுடன் துணை நிற்பதே என்னுடையே குறிக்கோள். போர் கலத்தில் உக்ரைன் மக்களுக்காக நிற்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : தைவான், ஹாங்காங்கை புரட்டி போட்ட ரகசா புயல்.. 17 பேர் பலி.. 20 லட்சம் பேர் பாதிப்பு!

போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு உக்ரைனில் தேர்தலை நடத்த கோருவேன். அப்போது தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.