சீனாவில் இடிந்து விழுந்த புதிய பாலம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்!

China’s Newly Opened Bridge Collapse | சீனாவில் சமீபத்தில் சுமார் 758 மீட்டர் நீளம் கொண்ட புதிய பாலம் ஒன்று திறக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பாலம் சரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் இடிந்து விழுந்த புதிய பாலம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்!

வைரல் வீடியோ

Published: 

15 Nov 2025 09:45 AM

 IST

பெய்ஜிங், நவம்பர் 15 : சீனாவின் (China) சிச்சுவான் (Sichuan) மாகணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாக திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், புதியதாக கட்டி திறக்கப்பட்ட பாலம் விபத்துக்கு உள்ளானது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சீனாவின் புதிய பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் இடிந்து விழுந்த புதிய பாலம்

சீனாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட 758 மீட்டர் நீளமுள்ள பாலம் தான் தற்போது இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலம் முழுவதுமாக இடியாமல் அதன் ஒரு பகுதி மட்டும் சரிந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். பாலம் முழுவதுமாக சரியாமல் பகுதி அளவு மட்டுமே சரிந்த நிலையில், இந்த விபத்து காரணமாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க : இரண்டு நாட்களாக கடும் இருமளால் அவதி அடைந்த இளம் பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

சீனாவின் மையப்பகுதியான திபெத்தை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையாக இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜப்பானை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. சுமானி எச்சரிக்கை!

அதாவது தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பாலம் இடிந்து விழுந்துள்ளது. பாலத்தை கட்டிய சிச்சுவான் சாலை மற்றும் பாலக் குழுமத்தின் சமூக ஊடக பதிவுகளின்படி, இந்த பாலத்தின் கட்டுமான பணி 2025 தொடக்கத்திலே நிறைவு பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதியதாக கட்டி திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.